திங்கள், 28 மே, 2018

தூத்துக்குடிக்கு புறப்பட்டார் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

தினத்தந்தி "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர்
போராட்டம் நடந்தது.  இந்த நிலையில், இந்த போராட்டம் 100வது நாளன்று பெரிய அளவில் நடத்தப்பட்டது.  இந்த சம்பவத்தில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியின்பொழுது வழியில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.  கண்ணீர் புகைக்குண்டுகள் வீசினர்.< எனினும் ஆட்சியர் அலுவலகத்தினை நோக்கி பேரணி சென்றது.  அங்கு போராட்டம் வன்முறையாக வெடித்தது.  இந்த சம்பவத்தில் கலகக்காரர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதில் 13 பேர் பலியாகினர்.  பலர் காயமடைந்தனர். தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்ற நிலை நீடித்து வந்தது.  இதனால் பதற்றத்தினை தணிப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில் 144 தடை உத்தரவு நேற்று முடிவுக்கு வந்தது.  நள்ளிரவு முதல் இணையதள சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.


இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.  

தூத்துக்குடியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓட தொடங்கியுள்ளன.  இயல்பு நிலை திரும்பியதனால் அங்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்ததனை அடுத்து துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார்.  இதற்காக நேற்றிரவு மதுரை சென்ற அவர் கோவில்பட்டியில் தங்கினார்.

இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தோரை காண்பதற்காக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று காரில் புறப்பட்டு சென்றார்.

கருத்துகள் இல்லை: