tamil.oneindia.com-veerakumaran.>பெங்களூர்:
ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 6வது சுற்று முடிவில், காங்கிரஸ் அபார
முன்னிலை வகித்து வருகிறது. அத்தொகுதியில் ஏறத்தாழ காங்கிரஸ் வெற்றி
உறுதியாகிவிட்டது.
கர்நாடக சட்டசபைக்கு மே 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெங்களூரிலுள்ள ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கும், போலி வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதால், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவில்லை.< இதில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கு கடந்த திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-மஜத இணைந்து கூட்டணி அமைத்திருந்தாலும் கூட, ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில், காங்கிரஸ், மஜத தனித்தனியாக களமிறங்கின. பாஜகவுடன் சேர்த்து அங்கு மும்முனை போட்டி நிலவியது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல், காங்கிரஸ் வேட்பாளரும் சிட்டிங் எம்எல்ஏவுமான, முனிரத்னா முன்னிலை வகித்து வருகிறார். முதல் சுற்றில், முனிரத்னா, 9342 வாக்குகளும், பாஜக வேட்பாளர் முனிராஜு கவுடா 4122 வாக்குககளும், மஜத வேட்பாளர் ராமச்சந்திரா 1539 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டங்களில் இறங்கிவிட்டனர்.
6வது சுற்று முடிவில் காங்கிரஸ் 52,285 வாக்குகள், பாஜக 20,858, மஜத 10,123 வாக்குகள் பெற்றுள்ளன. இதனால் காங்கிரஸ் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது காங்கிரஸ் வேட்பாளருக்காக சித்தராமையா பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால் பாஜக வேட்பாளருக்காக எடியூரப்பாவும், மஜத வேட்பாளருக்காக தேவகவுடாவும் பிரச்சாரம் செய்தனர்.
பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 78 இடங்களை கைப்பற்றியிருந்தது. ஆனால், ஜமகண்டி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காங்கிரசின், சித்துநியாமகவுடா (63), சில தினங்கள் முன்பாக நடைபெற்ற சாலை விபத்தில் பலியானார். எனவே, 77ஆக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் குறைந்திருந்தது.
ராஜராஜேஸ்வரி நகர் வெற்றியின் மூலம் மீண்டும் காங்கிரஸ் 78 எம்எல்ஏக்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக