இவருக்கு கட்டிடங்கள் மீது ஏறிய முன் அனுபவம் எதுவும் கிடையாது. இதுதான் முதல் தடவை. நான்காவது மாடியில் ஒரு நான்கு வயது சிறுவன் தொங்கி கொண்டிருந்த காட்சியை கண்டதும் எதையும் யோசிக்கவே முடியாத ஒரு வேகத்தில் வெறும் கைகளால் அந்த நான்கு மாடிகளின் வெளிப்புற தட்டுக்களை பிடித்து பாய்ந்து ஏறி அந்த நான்கு வயது குழந்தையை காப்பற்றி விட்டார் இந்த முகம்மது கசாக் என்ற பெயரை கொண்ட மாலி நாட்டு அகதி ... இவர் இன்று பிரான்ஸ் தேசம் மட்டுமல்ல உலகமே போற்றி கொண்டாடும் கதாநாயகன் .. இவருக்கு பிரஞ்சு பிரஜா உரிமையும் பல பரிசுகளும் வழங்க பட்டன. தீயணைப்பு படையில் உடனேயே வேலையும் வழங்க பட்டது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று ராமலிங்க வள்ளளார் போன்ற உள்ளத்தை இந்த மாமது பெற்றுள்ளார்
தினமலர் : பாரீஸ் : அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த சிறுவனை,
'ஸ்பைடர்மேன்' போல செயல்பட்டு காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு குவிகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நான்கு வயதான சிறுவன் தவறி விழுந்து, பால்கனியை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தான். இதை கவனித்த, மாலி நாட்டைச் சேர்ந்த கசாமா முகம்மது என்ற அகதி இளைஞர், 'ஸ்பைடர்மேன்' போல, கீழிருந்து ஒவ்வொரு மாடியாக ஏறி, தொங்கிக்கொண்டிருந்த குழந்தையின் உயிரை காப்பாற்றினார்.
இதற்குப்பின் தான், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அப்பகுதி மக்கள், அந்த இளைஞரை பாராட்டினர். அந்நாட்டு அதிபரிடம் இருந்து அழைப்பு வந்தது. இச்சந்திப்பில், இளைஞரை பாராட்டிய அதிபர் இம்மானுவேல் மக்ரோன், அவருக்கு பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை வழங்கினார். தீயணைப்பு துறையில் வேலையும் வழங்கினார். குழந்தையை காப்பாற்றிய ஸ்பைடர்மேன்
கசாமா கூறுகையில், ''குழந்தை தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்ததும், சிறிதும் யோசிக்காமல், ஒவ்வொரு மாடியாக வேகமாக ஏறி, காப்பாற்றினேன்,'' என்றார். மத்திய தரைக்கடல் வழியாக படகில் அகதியாக வந்த இந்த இளைஞர் இன்று ஹீரோவாகியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக