புதன், 30 மே, 2018

நடிகையர் திலகம் - ஜெமினி என்ற அகம்பாவம் பிடித்த ஆணின் சூழ்ச்சிக்கு

ஒருமுறை ஆந்திராவில் பந்த் காரணமாக அனைத்து ஒயின் ஷாப்புகளையும் மூடிவிட நடிகை சாவித்திரி அவர்கள் , மதுவுக்கு அடிமையாகியிருந்த காலகட்டம் அது..மது இல்லாமல் தன்னால் நடிக்க இயலாது கை நடுக்கமாக உள்ளது எப்படியேனும்( தெலுங்கில் :-- நாக்கு மந்து தாகாலி , தம்புடு நூ ஏமி சேஸ்தாவோ நாக்கு தெலியது நாக்கு இப்புடு காவாலி லேக்கபோதே நாவல்ல காது..நூ வெல்லி எக்கடனா தீஸ்கோனி ரா பாபு ) தமிழாக்கம் :- நடிகை சாவித்திரியம்மா அப்பாவிடம் எனக்கு மது வேண்டும் , தம்பி எனக்கு தெரியாது நீ என்னபண்ணுவாயோ , எனக்கு இப்போது மது வேண்டும் அது இல்லாமல் என்னால முடியல , நீ எங்கேனும் போய் அக்காவுக்காக வாங்கிவாபாபு என்று ஓவென கெஞ்சி சிறுபிள்ளையைப்போல அழுது கெஞ்சத் தொடங்கிவிட்டாராம்..!
Savitha Munuswamy : எனது அப்பா வாழ்ந்த வாழ்வின் ஒரு பகுதியை இன்று திரைவடிவில் கண்டு துக்கம் என் தொண்டையை அடைக்க ஒரு கனத்தில் அதை அடக்க முடியாமல் ஓவென வெடித்து அழுதுவிட்டேன்..! தியேட்டரில் அக்கம் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களெல்லாம் என்னை திரும்பித், திரும்பி பார்த்தது சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அதை பொருட்படுத்தாமல் அழுதுக்கொண்டுருந்தேன்...!

நடிகையர் திலகமாய் உலா வந்த சாவித்திரியம்மா அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான பையோபிக் படம் 'நடிகையர் திலகம்'.! தெலுங்கில் ' மகாநடி '- என்ற பெயரில் வந்துள்ளது. நான் ஒரு ஏழாம் வகுப்பு படிக்கும்போது எனது அப்பாவோடு இணைந்து பழைய படங்களை இரசித்து பார்ப்பேன்..! எனது அப்பாவின் பால்யகால நண்பர்கள் சிலரும் எங்களோடு அமர்ந்து தொலைக்காட்சியில் படங்களை பார்க்கும்போது....எனது அப்பாவின் நண்பர் என்னிடம் கூறினார்..யம்மா சவிதா நாங்க பள்ளிகூடம் படிக்கும்போது வாத்தியாரு எங்க வகுப்பில் டேய் உனக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்று எல்லோரிடமும் கேட்பார் , வகுப்பில் உள்ள அனைவரும் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என்றுதான் சொல்வார்கள் உங்கப்பன் மட்டும் எம்ஆர்ராதா என்பான்..! வாத்தியார் ஓகோ நீ அந்த இனமா..?! வில்லனுங்களதான் உனக்கு பிடிக்குமோ..! என்றுகூறி எல்லோர் முன்னிலையிலும் எனது அப்பாவை அந்த பார்ப்பன வாத்தியார் அவமானப்படுத்தியதை எங்களுடம் பகிர்ந்தார் அப்பாவின் நண்பர்..!

எனது அப்பா அவரது இளமைக்காலத்தில் தீவிர கம்யூனிசவாதி திரைப்படங்களில் பெரியதாக நாட்டம் இல்லாதவர்....அவரின் பாட்டி வீடு ஆந்திரமாநிலத்தில் ஒரு சிறிய கிராமம். அவரின் பெரியம்மா மகள் நடிகை சாவித்திரியைப்போல உருவ அமைப்பு கொண்டவர் அப்பா மீது பாசம் கொண்ட அவர் இளவயதிலேயே இறந்து விட்டார்..! ஆதலால் அப்பா நடிகை சாவித்திரி அவர்களை தனது அக்காவாக எண்ணி நேரில் சென்று அப்பழம்நடிகையை பார்த்துவிட்டு வருவார்..!
இயக்குனர் பீம்சிங் , எம்ஆர்ராதா போன்றோர்களிடம் அப்பாவிற்கு நட்பு ரீதியான பழக்கம் இருந்தது..! ஒரு முறை சித்தூர் ஜில்லா கார்வேட்நகரம் என்ற இடத்தில் நடிகை சாவித்திரி அவர்களின் ஷூட்டிங், அப்பாவும் அந்த ஷூட்டிங் முடியும் வரை அவர் அக்காவாக நினைக்கும் நடிகை சாவித்திரியம்மா அவர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதும் இருப்பாராம்...!
ஒருமுறை ஆந்திராவில் பந்த் காரணமாக அனைத்து ஒயின் ஷாப்புகளையும் மூடிவிட நடிகை சாவித்திரி அவர்கள் , மதுவுக்கு அடிமையாகியிருந்த காலகட்டம் அது..மது இல்லாமல் தன்னால் நடிக்க இயலாது கை நடுக்கமாக உள்ளது எப்படியேனும்( தெலுங்கில் :-- நாக்கு மந்து தாகாலி , தம்புடு நூ ஏமி சேஸ்தாவோ நாக்கு தெலியது நாக்கு இப்புடு காவாலி லேக்கபோதே நாவல்ல காது..நூ வெல்லி எக்கடனா தீஸ்கோனி ரா பாபு ) தமிழாக்கம் :- நடிகை சாவித்திரியம்மா அப்பாவிடம் எனக்கு மது வேண்டும் , தம்பி எனக்கு தெரியாது நீ என்னபண்ணுவாயோ , எனக்கு இப்போது மது வேண்டும் அது இல்லாமல் என்னால முடியல , நீ எங்கேனும் போய் அக்காவுக்காக வாங்கிவாபாபு என்று ஓவென கெஞ்சி சிறுபிள்ளையைப்போல அழுது கெஞ்சத் தொடங்கிவிட்டாராம்..! அப்பாவோ அக்கா இந்த மதுவை கொடுத்துதான் அந்த படுபாவி ( ஜெமினி கணேசன்) உங்களின் வாழ்வை பாழாக்கி , அதனால் உடல் பருமனாகி நீங்கள் மார்க்கெட்டை இழந்து இப்போது சிறிய , சிறிய வேடங்களில் நடிக்கரீங்க..! வேண்டாம் நான் உங்களுக்கு இந்த உதவியை செய்ய மாட்டேன் என்று அப்பா மறுத்துவிட்டாராம்...!
ஷூட்டிங் ஸ்பாட்டிலுள்ள இயக்குனர்களோ, எப்படியேனும் அவருக்கு வாங்கிவந்து கொடுத்துவிடுங்கள் இல்லையேல் அவர் அழ ஆரம்பித்து விடுவார் என்று வற்புறுத்தவே அப்பா உயர்வகை மது கிடைக்காமல் பட்டை சரக்குதான் இறுக்கு என்றவுடன் சாவித்திரியம்மா அதை வாங்கி பருகிவிட்டு, இரண்டு பக்கம் முழுவதுமுள்ள வசனத்தை ஒரு கிளான்ஸ் பார்த்துவிட்டு, ஒரே டேக்கில் நடித்து முடித்துவிட்டாராம்...! இதை நான் சிறிய பெண்ணாக இருக்கும்போது பழைய படங்களில் எனக்கு வைஜெயந்தி மாலாவைத்தான் பிடிக்கும் என்று, சாவித்திரி ஒன்றும் பெரியதாக இல்லை என்று நான் எனது அப்பாவிடம் கூறியதுதான் போதும் ... உடனே எனது அப்பா என்னை அடிக்காத குறையாக திட்டினார்...போயும், போயும் மனிபர்ஸ்வாயான அந்த பார்ப்பன நடிகையைத்தான் உனக்கு பிடிக்குதா..??!
எனது அக்காவின் ( சாவித்திரியம்மா) நடிப்பை நன்றாக உற்றுப்பார் ..அவரின் கண்கள் , புருவம் கூட ஆயிரம் கதைகளைச்சொல்லி நடிக்கும் , திரையை விட்டு வெளியே வந்து விட்டால் எனது அக்காவிற்கு நடிக்க தெரியாது ...அவ்வளவு வெள்ளந்தி எனது சாவித்திரி அக்கா ..என்பார்! எனது அப்பா..! சாவித்திரி அவர்களின் பாடல்கள் ஏதேனும் தொலைக்காட்சியிலோ, ரேடியோவிலோ வந்தால் வெளிக்காட்டாமல் கண்கலங்குவார் எனது அப்பா இதை பலமுறை அவரையே அறியாமல் நான் ரகசியமாய் கவனித்ததுண்டு..!
எனக்கு சற்று ஆச்சர்யமாகவே இருக்கும், நடிகையை யாரேனும் தனது கனவுக் கண்ணியாக நினைத்து கனவில் டூயட் பாடுவார்கள்..! எனது அப்பாவோ எங்க அக்கா பாட்டு வந்துடுச்சி என்று என்னிடம் அங்கே பாரும்மா என் அக்காவின் பவித்திரமான முகத்தை பார்..! அந்த பொருக்கி எனது அக்காவின் வாழ்வை திட்டமிட்டு கெடுத்துவிட்டான் என்பார்..! எனக்கோ என்நேரம் கோபமாகவும், கண்டிப்புடனும், சதா கொள்கையையே பேசிக்கொண்டிருக்கும் அப்பாவிடம் இந்த விடயத்தில் அப்பா இப்படி பேசுவது எனக்கு பிரம்மிப்பாகவே இருக்கும்..!
அவர் இப்படி கூறியதாலேயோ என்னமோ நானும் , சாவித்திரியம்மா அவர்களின், பாசமலர், நவராத்திரி, களத்தூர் கண்ணம்மா, மிஸ்சியம்மா போன்ற படங்களை ஆர்வத்தோடு சாவித்திரி அவர்களின் நடிப்பை உண்ணிப்பாக கவனித்து பார்த்தேன்..!
இன்று நடிகை சாவித்திரி அவர்களின் பயோபிக் படம் தமிழில் கீர்த்தி சுரேஷ் என்ற நடிகையின் நடிப்பில் வெளிவந்துள்ளது..எனக்கோ இப்பெண் எப்படி சாவித்திரி அம்மா அவர்களின் வேடத்தில் போய் பொருந்துவார்...??!! என்றே எண்ணிக்கொண்டு எனது அப்பா சாவித்தியம்மா அவர்களைப்பற்றி என்னிடம் கூறிய அந்த நினைவுகளோடு படம் பார்க்க சென்றிருந்தேன்...!! இக்கால நடிகை கீர்த்தி சுரேஷ் மிகவும் கனகச்சிதமாக அப்பாத்திரத்தில் பொருந்தியுள்ளார்...! எனது அப்பா சாவித்திரியம்மா அவர்களைப்பற்றி என்னிடம் கூறியவற்றில் ஏறக்குறைய தொன்னூறு சதம் கதை அப்படத்தில் காணக் கண்டேன்...!
ஜெமினி கணேசன் என்ற பார்ப்பன கயவனால் திட்டமிட்டு காதல் வளையில் விழவைத்தது..!
சாவித்திரி அவர்கள் ஒரு பெண் என்பதால் அவரின் வளர்ச்சியில் ஈகோ கொண்டு காழ்ப்புணர்வால் மனநெருக்கடிக்கு ஆளாக்கபடுவது மதுபழக்கத்தை புகட்டுவது என ஜெமினி என்ற அகம்பாவம் பிடித்த ஆணின் சூழ்ச்சிக்கு சாவித்திரியம்மா இறையாவது..!
பெண் பித்தனான ஜெமினி கணேசன் என்ற பார்ப்பன நடிகன் காதல் என்ற பெயரில் தனக்கு திருமணமானதை மறைத்து தன் காமவளையில் பெண்களை விழவைப்பது,
வருமான வரித்துறையின் ரெய்டால் தனது சொத்துக்களை, இழந்தபோதும், யாரிடமும் கையேந்தாது வரிய நிலையிலும் தன் பட்டு புடவையை மார்வாடி கடையில் அடகு வைத்து, அடுத்தவர்களுக்கு உதவி, உதவியே நடுத்தெருவுக்கு வந்து நிற்கும் இடத்தில் எனது அப்பாவை நினைவுப்படுத்துகிறது அக்காட்சிகள் எனக்கு..!
தர்மம் தலைகாக்கும் , தக்க சமையத்தில் உயிர்காக்கும் என்ற பழமொழிகளெல்லாம் பொய்த்துப்போனது எனது அப்பாவின் வாழ்விலும் சரி, நடிகை சாவித்திரியம்மா அவர்களின் வாழ்விலும் சரி..!
தர்மத்தோடு தம்மத்தை வழங்கிய எனது அப்பாவின் வாழ்வும் சாவித்தியம்மா அவர்களின் நிலையைப்போலவே கோரமாக முடிந்தது..!
நடிகையர் திலகம் :--- நிஜவாழ்வில் நடிக்கத் தெரியாதவர்களாதலால்...உரு தெரியாமல் போனார்கள்..! இவர்களைப்போல பிழைக்கத்தெரியாதவர்களால்தான் இம்மானுடச்சமுகம் பிழைத்துக்கொண்டிருக்கிறது..!!
மனபாரங்களோடு.
மு.சவிதா.

கருத்துகள் இல்லை: