செவ்வாய், 29 மே, 2018

துணை வட்டாட்சியரின் அளவு கடந்த அதிகாரம் .... வீட்டோ பவர் உள்ள ஒரே ஒரு அரச ஊழியர்

இதத் தெரிஞ்சுக்கங்க முதல்ல ..
"அதெப்படி துணை வட்டாட்சியர் ங்கற டெபுடி தாசில்தார் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு தரலாம்?அவருக்கு அவ்வளவு அதிகாரமா?"
இதான உங்க கேள்வி ..
"நம் சட்டம் என்ன செல்கிறது என்றால், துப்பாக்கிச் சூடு நடத்த உத்திரவு தரக்கூடிய உயர் அதிகாரிகள் பணியில் பிஸியாகவோ அல்லது தொடர்பு கொள்ள முடியாத நிலையிலோ இருந்தால்,பொது மக்கள் பாதுகாப்பு,சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதற்கடுத்த நிலையிலுள்ள அதிகாரிகள் உத்திரவிடலாம்.
அதன்படி தூத்துக்குடியில் கலவரம் நடந்த அந்த நாளில் தூத்துக்குடி எஸ்.பி கலவரத்தை கட்டுப்படுத்துவதில் பரபரப்பாக இருந்திருக்கலாம்.
கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு அவரது அறைக்குள்ளேயே கலெக்டர் முடக்கப்பட்டதால்,அவரால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல்,யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலைமையில் இருந்திருக்கலாம்.

இப்படி ஒவ்வொரு அதிகாரியும் தத்ததம் பணியில் பரபரப்பாக இருந்திருக்கலாம்.
எனவே அதிகார வரிசைப்படி துணை வட்டாட்சியர் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணையிட்டிருக்கலாம்..."
"அதன்படி,ஒருவேளை துணை வட்டாட்சியரும் பிஸியா இருந்திருந்தால்,ஆர்.ஐ, வி. ஏ. ஓ ஆணையிடலாம்.
ஆர். ஐயும், வி. ஏ. ஓ வும் ஜமாபந்தியில் பிஸியாக இருந்திருந்தால்,தலையாரி உத்திரவிடலாம்.
தலையாரியும் எங்காவது பயிர் கணக்கு எடுக்கப் போயிருந்தால்,
பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகவும்,சட்டம்-ஒழுங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காகவும்,
பொதுமக்கள் தங்களைத் தாங்களே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகலாம்......" - கருத்திருமன்

கருத்துகள் இல்லை: