வெள்ளி, 20 ஏப்ரல், 2018

மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என பார்க்கவே பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தினோம்..!’ எஸ்பிஐ தலைவர் அயோக்கிய கார்பரேட் அடிமை.

Chinniah Kasi : ‘விவசாயிகள் எப்படி தூக்குமாட்டி சாகிறார்கள்? எங்கே தூக்கு
மாட்டிக்கோ பார்ப்போம்! அயோக்கிய  கார்பரேட் அடிமைகள். மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என பார்க்கவே பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தினோம்..!’
எஸ்பிஐ தலைவர்
புதுதில்லி,

நாடு முழுவதும், கடந்த சில வாரங்களாக, ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் தங்களின் அன்றாடச் செலவுக்குக் கூட காசில்லாமல் திண்டாடி வந்தனர்.பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தைப் போல, ஏடிஎம் மையங் களில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே எடுக்க வேண்டும் என்று பல வங்கிகள் கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலைமை ஏற்பட்டது.இதனைச் செவ்வாய்க்கிழமை காலை, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் ஒப்புக்கொண்டார். விரைவில் இந்நிலை மாறும் என்றார். ஆனால், பணத்தட்டுப்பாட்டுக்கான காரணங்களை அவர் தெளிவாக்க வில்லை. மறுபுறத்தில், பணத்தட்டுப்பாடு குறித்துப் பேட்டி ஒன்றை அளித்த, பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தலைவர் ரஜினிஷ் குமார், “பணத்தட்டுப்பாடு இருப்பதாக பெரிய அளவில் பேசப்படுகிறது; ஆனால் அப்படி ஏதுமில்லை” என்றுகுற்றச்சாட்டுக்களை மறுத்தார்.
“பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு நாட்டில் 17 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்க பணம் புழக்கத்தில் இருந்தது. இதுவே 2018 மார்ச் மாதம் 18 லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது” என்று புள்ளி விவரங்களை வெளியிட்டு, “எனவே, பணத்தட்டுப்பாடு என்று யாரும் பயப்பட வேண்டாம்” என்றும் தெரிவித்தார்.அப்போது, “பணப்புழக்கம் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்றால், தற்போது தட்டுப்பாடு ஏன், வந்தது? என்று செய்தியாளர் மடக்கவே, “தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் பொறுத்தவரை, பணத் தட்டுப்பாடு சூழலில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதை அறிவதற்கான ஒரு உளவியல் ஆய்வுதான்” என்று கூறி, அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.மேலும், “மக்கள் ரொக்கமாக பரிவர்த்தனை செய்தாலும் அந்தப் பணம் வங்கிகளுக்குத்தான் திரும்பி வரப்போகின்றன; அப்படியிருக்க மக்கள், பணத்தை தங்கள் கைகளில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.இதனிடையே வங்கி வாடிக்கை யாளர்கள் பலர், சேமிப்புக் கணக்கில்மினிமம் பேலன்ஸ் வைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் போது, ஏடிஎம் மையங்களில் பணம் இல்லை என்றால் வங்கிகளுக்கு அபராதம் விதித்து அதனை வாடிக்கையாளர்களுக்குத் தர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை: