வெள்ளி, 20 ஏப்ரல், 2018

காஷ்மீர் . மாதத்திற்கு 700 மக்கள்... பாதிக்கப்படும் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் குருடர்களாக்கப்பட்டு, ஊனமான சமுதாயமாக

டக்ளஸ் முத்துக்குமார் : இந்திய ராணுவத்தால் குருடர்களாக்கப்படும் காஷ்மீர்
சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் - காவிகளின் திரைமறைவு இனஅழிப்பு..
காஷ்மீரில் கடந்த 2010ம் ஆண்டு முதல் பெல்லட் வகை குண்டுகள் இந்திய ராணுவம் மற்றும் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காவல்துறை அதிகாரிகள் இது அபாயகரமான வகையை சேர்ந்த ஆயுதம் இல்லை என்கின்றார்கள் .
ஆனால் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களோ இது அபாயகரமான ஆயுதம் இதனால் ஒருவருக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.
ஓரே குண்டில் 100 க்கும் மேற்பட்ட சிறு சிறு துகள்கள் வெளியே சீறி பாய்ந்து எதிர் இருபவர்களை கடுமையாக பதம் பார்க்கும் என்கிறார்கள் .
ஒவ்வொரு துகளும் சர்வ சாதாரணமாக உடலை கிழித்துக்கொண்டு உள்ளே செல்லும். கண் பகுதியில் தாக்கினால் திசுக்கள் கிழிந்து முழு பார்வை பறிபோகும் அளவிற்கு தாக்கம் இருக்கும். பெரும்பாலும் கண் பார்வை இழக்க நேரிடும் என்கிறார்கள்.
கலவரங்களை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் இந்திய ராணுவம் பெல்லட் குண்டுகள் அடங்கிய துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர்
இதில் பொது மக்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். பெல்லட் துப்பாக்கிகளால் பாதிக்கப்பட்டவர்களில் 18 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை காஷ்மீரின் 10 மாவட்டங்களிலிருந்து பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் மாதத்திற்கு 700 மக்கள் என்ற சராசரி எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்திய ராணுவம் இதை திட்டமிட்டே செய்துவருகிறது. RSS யின் தலைமை கட்டளையின் கீழ் ராணுவத்தால் இந்த பெல்லட் குண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகிறது.
காஷ்மீர் மக்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலைகள், கற்பழிப்பு போன்ற ராணுவ குற்றங்களுக்கு ஐ.நா விற்கு விசாரணையின் போது விளக்கமளிக்க வேண்டும் என்பதால், இந்த வகை அடக்குமுறையை கையாளுக்கிறது.
பெல்லட் குண்டு தாக்குதல் காஷ்மீர் மக்கள் போராட்டத்தை களைப்பதற்காக மட்டும் தான் இதனால் மக்களுக்கு எந்த பெரிய பாதிப்பு நிகழாது என்று இந்திய அரசும், ஊடகமும் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் இதற்கு பின்னாடி இருக்கும் சதியோ மிக கொடூரமானது.
ராணுவத்தால் இந்த தாக்குதல் பெரும்பாலும் காஷ்மீர் மக்கள் மார்புக்கு மேல் பகுதியிலேயே நிகழ்த்தப்படுகிறது. இதில பாதிக்கப்படும் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவு குருடர்களாக்கப்பட்டு, ஊனமான சமுதாயமாக மாற்றி, அவர்களை முற்றிலும் அழிப்பதே காவிகளின் திட்டம்.
இந்த தாக்குதல், காஷ்மீர் மக்களின் இனப்பெருக்கத்தை அடியோடு நிறுத்தவே காவிகளின் உத்தரவை ஏற்று இந்திய ராணுவத்தால் நிகழ்த்தப்படுகிறது.
இந்த தாக்குதல்களை சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆணையாளர்கள் தடை செய்யவேண்டும் என அறிக்கைகள் அளித்தும், முழங்காலுக்கு கீழ் மட்டும் கலவரத்தின் போது தாக்கலாம் என பார்ப்பன இந்திய அரசு, ராணுவத்திற்கு கட்டளையிட்டுள்ளது.
70 ஆண்டுகால உரிமை போராட்டம். புரட்சிகளை ஒடுக்கி அடுத்த தலைமுறையே ஊனமாக்கப்படுகிறது.
இதில் பெரிய கொடுமை.., அனைத்து மீடியாகளுக்கும் தெரிந்தும், இந்த செய்தியை வெளிட மறுக்கின்றது.

கருத்துகள் இல்லை: