வியாழன், 19 ஏப்ரல், 2018

நிர்மலா விவகாரம் எடப்பாடி அரசுக்கு தொடர் கண்ணி வெடியா?

மின்னம்பலம்: “நிர்மலா தேவியின் ஆடியோ வைரலாகப் பரவியது என் வழியாகத்தான்.
இப்போது நிர்மலா தேவி அனுப்பியதாக சொல்லப்படும் மெசேஜ்கள் எல்லாமே என் வழியாகத்தான் அனுப்பப்பட்டிருக்கிறது!” என்பது அந்த மெசேஜ்.
“இதுல உனக்கு ஒரு பெருமையா?’” என்று கிண்டலடித்தது ஃபேஸ்புக் கமெண்ட்.
தொடர்ந்து, அடுத்த மெசேஜ் வந்தது. “நிர்மலா தேவியைக் காவல் துறை கைது செய்தபோது, அவரிடமிருந்து ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டது. அது சாதாரண போன்தான். அதில் வாட்ஸ் அப் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. 27 போன் நெம்பர்கள் மட்டுமே அந்தப் போனில் பதிவு செய்யப்பட்டிருந்ததாம். இன்பாக்ஸில், கஸ்டமர் கேர் மெசேஜ்கள் மட்டுமே இருந்திருக்கின்றன. அவுட் கோயிங் மெசேஜ்களும் எதுவும் இல்லை. அந்தப் போனை அலசி ஆராய்ந்த பிறகுதான், திடீரென அந்தப் போனிலிருந்து இன்னொரு நெம்பருக்கு டயல் செய்து பார்த்திருக்கிறார்கள். அது நிர்மலா தேவி வழக்கமாகப் பயன்படுத்தும் எண் இல்லை. அதாவது மாணவிகளிடம் பேசிய செல்போன் நெம்பர் அது இல்லை.

‘அந்தப் போன் எங்கே?’ என போலீஸ் கேட்டபோது, ‘அது மிஸ் பண்ணிட்டேன்’ என்றுதான் சொல்லியிருக்கிறார் நிர்மலா. ஆனால் அதை நம்பாமல் காவல் துறை அதிகாரிகள் நிர்மலா வீட்டை சோதனை போட்டபோது, படுக்கை அறையில் தலையணைக்கு அடியில் அந்தப் போனை ஆஃப் செய்து வைத்திருக்கிறார். அதை எடுத்து ஆன் செய்தபோதுதான் போலீஸாரே அதிர்ந்துவிட்டனர். அத்தனை வசதிகளும் இருக்கும் ஸ்மார்ட் போன் அது. வாட்ஸ் அப்பிலிருந்துதான் பலருடனும் பேசியிருக்கிறார் நிர்மலா. கால்கள் 18 நிமிடங்களிலிருந்து 40 நிமிடங்கள் வரை கூடப் போயிருக்கின்றன. வாட்ஸ் அப் கால்களை ரெக்கார்டு செய்ய முடியாது என்பது நிர்மலாவுக்கு வசதியாகிப் போயிருக்கிறது.
கல்லூரி மாணவிகள் பலருக்கும் வாட்ஸ் அப் மெசேஜ் வழியாக நூல் விட்டுப் பார்த்திருக்கிறார் நிர்மலா. தற்போது ஆடியோவில் பேசியிருக்கும் பெண்களைத் தவிர வேறு சிலரிடமும் வாட்ஸ் அப் மெசேஜில் பேசியிருக்கிறார். எல்லாமே பாலியல் ரீதியான சமாச்சாரங்கள்தான்! ‘நீங்க இப்படி கேட்பீங்கன்னு நினைக்கலை மேடம்!’ என்றுதான் மாணவிகளிடம் இருந்து ரிப்ளை வந்திருக்கிறது. இந்த மாதத்தில் நிர்மலா இதை ஆரம்பிக்கவில்லை. அவரது பிரீவியஸ் மெசேஜ்கள் எல்லாமே இதே ரீதியில்தான் இருக்கிறதாம். இன்னும் சில மெசேஜ்களில் வகுப்பறையில் மாணவிகள் இருக்கும் படத்தை ஒருவருக்கு அனுப்பியிருக்கிறார். சில மாணவிகளின் தனிப் படமும் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டிருக்கிறது. அந்தப் போட்டோக்களைப் பார்க்கும் நபர், ‘சூப்பர்... ஒகே’ என்று ரிப்ளையும் செய்திருக்கிறார். அதாவது மாணவிகளின் படங்களை முன்கூட்டியே அனுப்பி அவர்கள் ஓகே சொன்ன பிறகுதான் சம்பந்தப்பட்ட மாணவிகளை அணுகியிருக்கிறார் நிர்மலா. அவர் அனுப்பியிருக்கும் மெசெஜ்கள் அதைத்தான் சொல்கின்றன.
இதில் காவல் துறைக்கு இன்னொரு சிக்கலும் இருக்கிறது. நிர்மலா மெசேஜ் அனுப்பிய நம்பர்களை விசாரித்தால், எல்லாமே போலியான முகவரிகளைக் கொடுத்து வாங்கிய நம்பர்களாம். அந்த சிம் கார்டு பயன்படுத்திய போன் ஐ.எம்.இ. நெம்பரை வைத்து சம்பந்தப்பட்டவரை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியிருக்கிறது போலீஸ்.
நிர்மலா செல்போனிலிருந்த மெசேஜ்கள் எல்லாமே பிரிண்ட் எடுக்கப்பட்டு ஒரு காப்பி நீதிமன்றத்திலும், இன்னொரு காப்பியை சி.பி.சி.ஐ.டி வசமும் ஒப்படைத்திருக்கிறது போலீஸ். மொத்தம் 350 பக்கங்களுக்கு மேல் மெசேஜ்கள் இருக்கின்றன. நிர்மலா தேவி பயன்படுத்திய இரண்டு போன்களில் கடந்த ஒரு வருடத்திற்கான அவுட் கோயிங் கால்கள், இன் கமிங் கால்கள் ஆகியவை லிஸ்ட் எடுக்கப்பட்டு இருக்கின்றன. நிர்மலா அதிகம் பேசிய நம்பர்கள், அதிகம் மெசேஜ் அனுப்பிய நம்பர்களை வகை பிரித்திருக்கிறார்கள். இதெல்லாம் வைத்துதான் நிர்மலா தேவி விவகாரம் அடுத்த கட்டத்துக்கு நகரும்’ என்று சொல்கிறார்கள் காவல் துறையில் உள்ள விவரமறிந்தவர்கள்”

கருத்துகள் இல்லை: