தினமலர் :ஷாஜாபூர்: 'நாட்டில் புழக்கத்தில் இருந்த 2
ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் எங்கே போயின; ஏதோ சதி நடப்பதாக
தோன்றுகிறது' என ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
ம.பி., மாநிலம் ஷாஜாபூரில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன் நாட்டில் ரூ.15 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை முடிந்தபின் புழக்கத்தில் இருந்தது ரூ.16.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தற்போது எங்கும் பார்க்க முடிவதில்லை. பல ஏடிஎம்.,கள் பணம் இல்லாமல் பூட்டிக் கிடக்கின்றன. பதுக்கியவர்கள் யார்?
புழக்கத்தில் பணம் இல்லாததால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதில் ஏதோ சதி இருக்கிறது. ரூ.2000 நோட்டுகள் எல்லாம் எங்கே சென்றன. பணத்தை பதுக்கியவர்கள் யார்? அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி பணத்தட்டுப்பாட்டை போக்க முயற்சிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக