ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

இலங்கை ராணுவம் 683 ஏக்கரை விடுவித்தது .. இடிந்த வீடுகளை பார்த்து அழுத மக்கள் .. திட்டி தீர்த்தனர்


வலம்புரி: இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கில் –
வீடுகள்  அடையாளமே தெரியாதவாறு தரைமட்டமாக உடைக்கப்பட்டுள்ளது ; கடந்த 28 வருடங்களாக இராணுவ ஆக்கிரமிப்பி லிருந்து விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கில் பொது மக்களின் வீடுகள் அடையாளமே தெரியாதவாறு தரைமட்டமாக உடைக்கப் பட்டதோடு அவ்விடங்கள் பற்றைக்காடுகளாக காணப்படுகின்றது. தமது காணிகளையும் வீடுகளையும் ஆவலுடன் பார்க்கச் சென்ற மக்கள் இக்காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டு அழுததுடன் இராணுவத்தினரையும் திட்டித்தீர்த்தனர்.
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக வலிகாமம் வடக்கிலிருந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு தமது இடங்களை விட்டு வெளியேறியிருந்தனர். இதன் பின்னர் கட ந்த 28 வருடங்களாக படையினரின் உயர் பாதுகாப்பு வலயங்களாக ஆக்கிரமிக்கப்பட்டி ருந்தது.
இதனையடுத்து தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்பட்டு வந்தன. இதே போன்று நேற்றும் 4 கிராமசேவகர் பிரிவு களைச் சேந்த மக்களின் 683 ஏக்கர் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டிருந்தது.
பல வருடங்களின் பின்னர் தமது காணிகள் விடுவிக்கப்பட உள்ளதால் அதனைப் பார் வையிடுவதற்கு அக் காணிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலலுடன் வந்திருந்தனர்.
ஆயினும் அங்கு காணிகள் பலவும் அடையாளம் காண முடியாத வகை யில் வீடுகள் பலவும் இடித்து தரைமட்டமாக் கப்பட்டு பற்றைகள் நிறைந்த காடுகளாகவே காணப்பட்டிருந்தன.
தமது காணிகள் விடுவிக்கப்படுவதால் மிகு ந்த மகிழ்ச்சியுடன் வந்திருந்த மக்கள் தமது காணிகளை பார்த்து கடும் வேதனையடை ந்திருந்தனர்.
மேலும் பலர் தமது காணிக ளைப் பார்த்து கண்ணீர் விட்டும் கதறியழுதனர். தமது இத்தகைய நிலைமைகளுக்கு படையினரே காரணமென்றும் அவர்களால் இதனைத் திருப்பிக் கொடுக்க முடியுமா எனக் கேள்வியெழுப்பி படையினரையும் திட்டித் தீர்த்துக் கொண்டனர்.
இதே வேளை அங்கு படையினர் நிலை கொண்டிருந்த காணிகளில் இருந்த வீடு களை படையினர் பயன்படுத்தியிருக்கின்றனர்.
ஆனால் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக அக்காணிகளிலிருந்த வீடுகளின் கூரைகளையும் யன்னல்களையும் படையி னர் பிடுங்கிக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
இதனால் அந்த வீடுகளும் சேதமடை ந்த நிலையிலையே காணப்படுகின்றன.
மேலும் தற்போது படையினர் அமைத்து ள்ள உயர் பாதுகாப்பு வலய எல்லையிலுள்ள வீடுகள் பலவும் இருக்கின்ற போது விடுவி க்கப்பட்ட இடத்திலிருந்த வீடுகள் மட்டும் ஏன் இடித்தழிக்கப்பட்டிருக்கின்றதென்றும் அந்த மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
காணி கள் விடுவிக்கப்படுவதாலேயே படையினர் இந்த வீடுகளை இடித்தழித்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை: