மின்னம்பலம்: மறைக்கப்படும் ரகசியங்கள்!
மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்திருக்கிறது. இதற்கிடையில் நிர்மலா தேவியை சந்திக்க அவரது வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் நேற்று சிறைக்கு சென்றிருந்தார். அப்போது அவரிடம் நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார் நிர்மலா தேவி.
‘ஏதோ நான் தப்பு செஞ்ச மாதிரி எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. நான் அடிமட்டத்துல இருக்கும் ஒரு சாதாரண ஊழியர். அவங்க செய்யச் சொன்னதை செய்யும் ஒரு ஊழியர். மேல் மட்டத்தில் இருக்கிறவங்க சொல்லும் போது செய்யாமல் எப்படி இருக்க முடியும்? யாரெல்லாம் சம்பந்தப்பட்டு இருக்காங்கன்னு இதுவரைக்கும் நான் யாருகிட்டயும் சொல்லவே இல்லை. ஆனால் அதுக்குள்ளவே எனக்கு நிறைய மிரட்டல் வரத் தொடங்கிடுச்சு. ஜெயிலுக்குள்ள என்னை சுத்தி ஏதோ நடக்குது. ஜெயில்ல இருந்து நான் உயிரோடு வெளியே வருவேனா என்பது கூட தெரியல. அந்த அளவுக்கு எல்லாமே மர்மமாக இருக்கு...’ என்று புலம்பியிருக்கிறார்.
நிர்மலா தேவியை சந்தித்துவிட்டு வந்த அவரது வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் நேற்று முழுக்க அவருக்கு ஆதரவாகப் பேசி வந்தார். ‘நிர்மலா தேவி வெறும் அம்புதான்! அதை எய்தவரை பிடிங்க...’ என்றெல்லாம் சொன்னார். இன்று மதியம் திடீரென, ‘எனது சொந்த விருப்பத்தின் பேரில் நான் நிர்மலா தேவி வழக்கில் இருந்து விலகிக் கொள்கிறேன். எனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் நிர்மலா தேவிக்காக இனி ஆஜராக மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு விலகிக் கொண்டார். ஒரே இரவில் வழக்கை விட்டே ஓடும் அளவுக்கு விரட்டியது என்ன என்றும் விசாரித்தோம்.
‘வழக்கறிஞர் பாலசுப்ரமணியனுக்கு சொந்த ஊர் அருப்புக்கோட்டைதான். தேவாங்கர் சமூகத்தை சேர்ந்தவர். நிர்மலா தேவியின் சகோதரருக்கு நெருக்கமான நண்பரும் கூட. அவரது குடும்பத்தை நன்கு அறிந்தவர் என்பதால்தான் இந்த வழக்கில் நிர்மலாவுக்காக ஆஜராகி இருக்கிறார். நிர்மலாவை சிறையிலும் சென்று சந்தித்தார். அவரிடம் இந்த வழக்கில் தொடர்புடைய பல ரகசியங்களை நிர்மலா சொல்லியிருக்கிறார். இதெல்லாம் நிர்மலா தேவியின் பின்புலத்தில் இருக்கும் நபர்களுக்கு தெரிந்திருக்கிறது. நேற்று இரவு வழக்கறிஞர் பாலசுப்ரமணியனை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.
‘இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை. அந்தம்மா இதைச் சொன்னாங்க... அதைச் சொன்னாங்கன்னு வெளியில பேசிட்டு இருந்தால், என்ன நடக்கும்னு தெரியாது’ என்று ஒரு குரல் பேசியிருக்கிறது. இப்படியாக நேற்று இரவில் மட்டும் பாலசுப்ரமணியனுக்கு அடுத்தடுத்து பல போன் கால்கள் வந்திருக்கிறது. பேசியவர்கள் எல்லாருமே மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்கள். ’நீ என்னமோ நிர்மலா உயிருக்கு ஆபத்து இருக்குனு பேசிட்டு இருக்கே.. உன்னோட உயிருக்கு ஆபத்து இருக்குனு உனக்கு தெரியுமா? உனக்கு கேஸ் முக்கியமா.. உசிரு முக்கியமா?’ என்றெல்லாம் போனில் பேசியவர்கள் மிரட்டியதாக சொல்கிறார்கள். அதனால்,சத்தமில்லாமல் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொண்டார் பாலசுப்ரமணியன்.
நிர்மலா பேசிய ஆடியோ வெளியானாலும், இதைத்தாண்டி இந்த விவகாரத்தில் அடுத்த மூவ் இருக்கக் கூடாது. இதன் பின்னணியில் இருக்கும் யாரும் சிக்கிவிட கூடாது என்று அந்தக் கும்பல் செம ஸ்பீடாக செயல்பட ஆரம்பித்துவிட்டது. பாலசுப்ரமணியன் ஒரே நாளில் பயந்துவிட்டார். ஆனால், அவர் இது சம்பந்தமாக வெளியே பேசவே இல்லை. வழக்கறிஞருக்கே இவ்வளவு ப்ரஷ்ஷர் என்றால் இந்த விவகாரம் எப்படி வெளியே வரும். அந்த அளவுக்கு பவர் ஃபுல்லாக இருக்கிறது இந்த விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்களின் செல்வாக்கு!’ என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். ”சிறையில் இருக்கும் போதே இவ்வளவு அழுத்தம் என்றால், போலீஸ் கஸ்டடி எடுக்கப்பட்டாலும் உண்மை வெளிவரவாப் போகிறது? எல்லாமே கண் துடைப்பாக மட்டுமே முடியும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவிகள் எங்கேயும் பேசிவிடக் கூடாது என்று கண்கொத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது ஒரு டீம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக