திங்கள், 16 ஏப்ரல், 2018

பேராசிரியர் நிர்மலாவைக் காப்பாற்றுங்கள்.. உயிருக்கு ஆபத்து?


Vr Jayanthi : நிர்மலா குற்றவாளி இல்லை என்ற பதிவு இல்லை , அவருக்கு
இப்படி ஒரு தரகு வேலை செய்ய பணித்தது யார் , நிர்மலா என்பவருக்கும் எந்தவிதத்தில் நிர்பந்தம் இருந்தது என ஆராய்வது அவசியம். அவரின் பதவிக்காகவா?, பணத்தேவைக்காகவா? அல்லது வேலையின் பாதுகாப்பு கருதியா ?
இந்த case நேர்மையாக நடக்கிறதா என தொடர்ந்து கண்காணிப்பது ஊடகம் மற்றும் எதிர் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடமை. ஆணிவேரை நீக்குவதே நிரந்தர தீர்வாக அமையும்.

Ilangovan Geetha.
நிர்மலாவைக் காப்பாற்றுங்கள்.
வில்லில் இருந்து புறப்பட்டு வந்த அம்பு மட்டுமே நிர்மலா.
அம்பினை முறிப்பதால் மட்டும் ஆபத்துக்கள் நின்றுவிடப்போவதில்லை.

பாலியல் தொடர்பான எந்த விசயம் அம்பலப்படும் போதும் அங்கே பெண்ணை மட்டும் கசக்கி அழித்து விட்டு ஏனையோரைத் தப்பிக்க விடுவதே சமூக பொதுப் புத்தியாக இருக்கிறது.
நிர்மலாவின் மீது கல் எறிபவர்கள் அவருக்குப்பின்னால் இருந்து நிர்மலாவை இயக்கிக் கொண்டிருக்கும் கயவர்களை, கோழைகளை சேர்த்தே தண்டிக்கவேண்டும் என்பதை மறக்கவேண்டாம்.
நிர்மலாவை அழிக்க வேண்டும் என்ற அதே எண்ணம் பொது மக்களுக்கு இருப்பதை விடவும் பல மடங்கு நிர்மலாவின் பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் வஞ்சகனுக்கு இன்று இருக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
உங்கள் அறச்சீற்றம் வெறும் ஆத்திரமாக மட்டும் எழும்பி அணையாமல் வெஞ்சினமாக கனல் கொள்ளட்டும்.
அது இக்கொடுஞ்செயலுக்கு காரணமானவர்கள்- அவர்கள் எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் அவர்கள் தப்பி விடாமல் கண்டுபிடிக்க வேண்டும். ஆழ வேரோடும் வெவ்வேறு இடங்களில் பரப்பி வைத்திருக்கும் நீண்ட கிளைகளோடும் இருக்கும் அவர்கள் பின்புலத்தை பூண்டோடு அழித்தெடுக்கும் வரை நீறு பூத்த நெருப்பாக உயிர்ப்புடன் செயல்படட்டும்.
எனவே நிர்மலாவை ஆத்திரங்களுக்கு- அவசரங்களுக்கு பலிகொடுத்து விடாமல் காப்பாற்றுங்கள்.

கருத்துகள் இல்லை: