tamiloneindia -Gajalakshm :
ஏடிஎம்களில் மீண்டும் பணத்தட்டுப்பாடு, அவதியில் மக்கள்-
டெல்லி
: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வங்கி ஏடிஎம்களில் பணம்
எடுக்க முடியாமல் மக்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏடிஎம்களை தேடி
அலைந்தது போல தற்போது பணம் எடுப்பதற்காக தேடி அலைவதாக சமூக வலைதளங்களில்
கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
உயர் ரூபாய் நோட்டுகளான ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததால் திடீரென நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பணப்புழக்கம் இல்லாததால் ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் கட்டுப்பாடுகளுடன் பணத்தை எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. புதிய ரூபாய் நோட்டான ரூ. 2000 அச்சிடப்படாமல் அவசரகதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே மக்கள் அவதியடையக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து போதிய பணம் கிடைக்காததால் குஜராத் ஏடிஎம்களில் பணம் கிடைக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக