தினகரனுக்கு எதிராக திமுக முறைப்பாடு .! புதிய சிக்கலில் மாட்டியுள்ள தினகரன்.!!
பல்வேறு பணபுகார்களுக்கு இடையே ஆர்.கே நகர் தேர்தல் கடந்த வருடம் டிசம்பர் மாதம 21 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் அபாரமாக வெற்றி பெற்றார்.
மேலும் திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் டெபாசிட் இழந்தார். பின்னர் தினகரனின் வெற்றிக்கு பணம் பட்டுவாடா தான் காரணம் என பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டினர்.
மேலும் அவரது தரப்பில் இருந்து ரூ. 20 டோக்கனாக கொடுத்து ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என குற்ற சாட்டுகள எழுந்தது
இந்நிலையில் திமுக திமுகவின் மருது கணேஷ் தினகரன் மீது ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் தினகரன் தேர்தல் நேரத்தில் ரூ.28 லட்சத்தை விட கூடுதலாக செலவு செய்துள்ளார் என கூறியுள்ளார்.
மேலும் தினகரனின் வெற்றியை தேர்தல் ஆணையம் தகுதி இழக்க செய்ய வேண்டும் என கூறியுள்ளார். லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக