தினத்தந்தி :சென்னையில் சீட்பெல்ட் அணியாததால் கண்டித்ததாக கூறி
தீக்குளித்த கார் ஓட்டுநர் மணிகண்டன் இறந்தார்
நெல்லையை சேர்ந்தவர்
மணிகண்டன் (வயது 28). இவர் தாம்பரம் பகுதியில் தங்கி இருந்து, கிண்டியில்
உள்ள தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் கார் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று
மாலை வேளச்சேரிக்கு சவாரி சென்றுவிட்டு கிண்டிக்கு திரும்பி வந்து கொண்டு
இருந்தார். சென்னை தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் வேளச்சேரி
போக்குவரத்து போலீசார் 4 பேர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது
அந்த வழியாக மணிகண்டன் காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் வந்ததாக தெரிகிறது.
இதை கண்டதும் அவரது காரை போலீசார் நிறுத்தினார்கள். காரில் ‘சீட் பெல்ட்’
அணியாமல் வந்ததால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவரிடம்
போக்குவரத்து போலீசார் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால்
போக்குவரத்து போலீசாருக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம்
ஏற்பட்டது. அப்போது போக்குவரத்து போலீசார், டிரைவர் மணிகண்டனை தாக்கியதாக
கூறப்படுகிறது. மேலும் மணிகண்டனின் ஓட்டுனர் உரிமம், செல்போன்
ஆகியவற்றையும் போலீசார் பறித்துக்கொண்டனர்.
பொது
இடத்தில் வைத்து தன்னை போலீசார் தாக்கியதால் அவமானம் அடைந்த டிரைவர்
மணிகண்டன், அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து 1 லிட்டர் பெட்ரோல்
வாங்கி வந்தார்.
தனது கார் முன் வந்த மணிகண்டன்,
போக்குவரத்து போலீசார் கண் எதிரேயே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி
தீக்குளித்தார். அவரது உடல் முழுவதும் தீ பரவியது.
இதனால்
அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து போலீசார், அங்கிருந்து ஓடி விட்டனர். ஒரே
ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் மட்டும் ஓடி வந்து மணிகண்டன் உடலில் எரிந்த
தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இதில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக