தினமலர்: சென்னை:ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை
சென்றவருக்கு, ஓய்வூதியம் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்
நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருப்பூரைச்
சேர்ந்தவர், சொக்கலிங்கம்; ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, ௪௪
நாட்கள் சிறையில் இருந்தார். பின், நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு,
கோவை சிறையில், ௧௦ நாட்கள் அடைக்கப்பட்டார். மொழிப்போர் காவலர்களுக்கு,
ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில், தனக்கு ஓய்வூதியம் கோரி, சொக்கலிங்கம்
விண்ணப்பித்தார்.
அரசுக்கும், சொக்கலிங்கத்துக்கும் இடையே, பல முறை கடிதப் போக்குவரத்து நடந்தும், ஓய்வூதியம் வழங்குவதற்கான உத்தரவு
வரவில்லை.சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்.
அவரது கோரிக்கையை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கும்படி, அரசுக்கு, உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அவரது மனுவை, அரசு நிராகரித்தது.இந்த உத்தரவைஎதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மீண்டும், சொக்கலிங்கம் மனு தாக்கல் செய்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழுமலை, ''தமிழ் வளர்ச்சித் துறை, 2007ல் பிறப்பித்த அரசாணையில், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத் தில் சிறை சென்ற, மொழிக் காவலர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ''அதனால், ஓய்வூதியம் வழங்கும்படி, மனுதாரர் கோர முடியாது,'' என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:
தமிழ் மொழி பாதுகாப்புக்காக நடந்த போராட்டத்தில், மனுதாரர் பங்கேற்று, மூன்று < முறை சிறை சென்றதாக, அவர் தரப்பு வழக்கறிஞர் கூறியதில், எந்தசந்தேகமும் இல்லை. சிறை அதிகாரிகள் அளித்த ஆவணங்கள், சான்றிதழின் அடிப் படையில், ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்து உள்ளார். அரசும் சட்டம் கொண்டு வந்தது.
ஆனால், ஹிந்தி எதிர்ப்பு போராளிகளுக்கு, ஓய்வூதியம் வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என, உத்தரவிட்டு உள்ளது.வேற்றுமையில் ஒற்றுமை காணும் கொள்கைப்படி, அனைத்து மொழிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் உள்ள செழுமை மற்றும் தனித்துவம் குறித்து, ஒவ்வொருவரும் மகிழ்ந்து கொள்ள வேண்டும்.
மொழி போராளிகளுக்கு உதவும் வகையில், அரசு சட்டம் இயற்றினாலும், அரசாணைப்படி, அந்த பலன் நிறுத்தப்பட்டு விட்டது.அரசாணை அமலில் இருக்கும் போது, அதற்கு எதிராக, எந்த அதிகாரியும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே, மனுதாரர் கோரிக்கையை ஏற்க இயலாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக