வெப்துனியா :கடந்த
சில மாதங்களாக பாஜகவின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு இயங்குவதாக குற்றம்
சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவரை
ஒருவர் தாக்கி அறிக்கை விட்டு வருகின்றனர். எனவே வரும் தேர்தலில் அதிமுகபாஜக கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
இந்த நிலையில் பாஜகவுக்கு உள்ள அடுத்த ஒரே வாய்ப்பு திமுகவுடன் கூட்டணி
அமைப்பதுதான். அதிலும் பிரதமர் மோடி சென்னை வந்தபோது திமுக தலைவர்
கருணாநிதியை சந்தித்த பின்னர் பாஜகவும் திமுகவும் நெருங்கி வருவதாக
கூறப்படுகிறது. இரு கட்சிகளும் ஏற்கனவே வாஜ்பாய் காலத்தில் கூட்டணியில்
இருந்த கட்சிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப டாக்டர் இல்ல திருமண நிகழ்ச்சி ஒன்றில், திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலினும், பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியும் திடீரென சந்தித்து இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர். இந்த சந்திப்பு புதிய கூட்டணிக்கு அச்சாரமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக