திங்கள், 22 ஜனவரி, 2018

கடவுள் மறுப்பை இயக்கங்கள் பேசட்டும் .....? ஆட்சியை கவனியுங்கள் ?

Shalin Maria Lawrence : வலதுசாரிகள் உங்களை விமர்சிக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம்தான்.நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறீர்களா என்பதுதான் அவர்களது கேள்வி.
தோழர் ஸ்டாலின் கடவுள் மறுப்பாளரா இல்லை ஆத்திகரா என்பது விமர்சகர்களின் கவலை இல்லை. அவர் எதுவாக இருக்கிறார் என்பதனை தெளிவாக விளக்க வேண்டும் என்பதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஜெயலலிதாவை எடுத்து கொள்ளுவோம்.
அவர் திராவிட கட்சியின் தலைமையில் இருந்தாலும் அவர் ஒரு ஆத்திகராக இருந்தார் ,வெளியிலும் அப்படியே நடந்து கொண்டார்.

வலதுசாரிகள் பலம் பெற்றிருப்பதன் ஒரே காரணம் அவர்கள் கொண்ட கொள்கையில் பிடிப்புடன் இருப்பதுதான். நடிப்பே ஆனாலும் அதை சிரத்தையுடன் continuity மாறாமல் பார்த்துக்கொள்கின்றனர்.
ஆனால் இடதுசாரி என்று சொல்கிறவர்கள் கட்சியின் கொள்கை ஒன்று அவர்கள் தனிமனித விருப்பு வெறுப்புகள் வேறு என்று இருக்கும்போது அதை மறைக்காமல் வெளியே காட்டிக்கொள்ளவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

நீங்கள் ஒரு திமுக ஆன்மீகவாதியாக இருந்தாலும் அதை உள்ளே ஒன்று வெளியே ஒன்று என்று இருப்பதுதான் இங்கே பிரச்னை.
They are accusing your integrity and not your belief.
அவர்கள் உங்கள் சிந்தனை ஒருமைப்பாட்டை தான் விமர்சிக்கிறார்களே ஒழிய உங்களின் நம்பிக்கையை அல்ல.
இந்த நூற்றாண்டு தொழில்நுட்பத்தின் நூற்றாண்டு. இங்கே தகவல் ஒளியின் வேகதைவிட அதிகமாக பரவுகிறது.இங்கே எதையும் மறைக்க முடியாது.புகைப்படங்கள் ,காணொளிகள் ,தகவல்கள் என அனைத்தும் அனைவரும் எளிதில் பார்த்து புரிந்துகொள்ள ஏதுவாய் இருக்கிறது.
Time for you to come out of the closet.
கொள்கையை மறு பரிசீலனை செய்கிறீர்களா செய்து கொள்ளுங்கள்.உங்களுக்கு ஏற்றதுபோல் ,நவீன தேர்தல் களத்திற்கு ஏற்றதுபோல் கொள்கையை மாற்றி அமையுங்கள். ஆனால் ஏதாவது ஒன்றிற்கு உண்மையாக இருங்கள்.
கடவுள் மறுப்பு பேசுவதற்கு இயக்கங்கள் இருக்கின்றன.நீங்கள் ஆட்சி செலுத்த வசதியாக எது தேவைபடுமோ அதில் கவனம் செலுத்துங்கள். ஆனால் மர பீரோவில் வைத்திருக்கும் இறந்தவரின் புடவைகளை போல் உங்கள் கட்சியின் கொள்கைகளை சம்பரதாயத்திற்காக அப்படியே வைத்திருக்காதீர்கள் அது உங்களுக்கும் யாருக்கும் ப்ரயோஜனபடாது.
ஷாலின்

கருத்துகள் இல்லை: