தினத்தந்தி ::பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபடுவோம் என்று டாவோஸ் உலக
பொருளாதார உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
டாவோஸ்,
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நேற்று தொடங்கியது.
இதில், ‘பிரிந்து உள்ள உலகில், எல்லோரும் பகிர்ந்துகொள்ளும் எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 1997-ம்ஆண்டு பிரதமராக இருந்த தேவ கவுடா இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசி இருக்கிறார். அவருக்கு பின்னர் இப்போது நான்தான் இதில் பங்கேற்று உள்ளேன்.
இடைப்பட்ட காலத்தில் இந்திய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றத்தை சந்தித்து உள்ளது. அப்போது இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 400 பில்லியன் டாலராக (சுமார் ரூ.26 லட்சம் கோடி) இருந்தது. இப்போது 6 மடங்குக்கு மேல் அதிகரித்து உள்ளது.
இந்தியா எப்போதுமே உலக அமைதிக்காகவும், ஜனநாயகத்துக்காகவும், பன்முகத்தன்மைக்காகவும்தான் இருந்து வருகிறது. இதுதான் இந்தியாவின் உள்ளார்ந்த பலம்.
உலகத்தை ஒரே குடும்பமாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.
எல்லா பிளவுகளையும், பிரச்சினைகளையும் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியும். நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்போம். நாம் அனைவரும் நலமாக இருப்போம். சமாதானமாக இருப்போம்.
நமது திறமை தனிப்பட்ட நபர்களாகவும், நாடுகளாகவும் ஒன்றுபட்டு மலர வேண்டும். ஜனநாயகம் என்பது வாழ்வின் தத்துவம்; பரந்த பார்வையின் அங்கம்.
மற்றவர்களின் இயற்கை வளங்களை சுரண்ட வேண்டும் என்று இந்தியா ஒருபோதும் கண் வைத்தது கிடையாது.
இந்தியா முன்கூட்டி கணிக்கத்தக்க, நிலையான, முற்போக்கு நாடு. நீங்கள் ஆரோக்கியத்துடன் வளம் பெற வேண்டும், முழுமைத்தன்மையுடன் ஆரோக்கியம் பெற வேண்டும், சமாதானத்துடன் செல்வம் பெற வேண்டும் என்று விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்.
பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், தன்நல மைய அணுகுமுறை ஆகியவை உலகுக்கு சவால்களாக அமைந்து உள்ளன.
பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே அச்சுறுத்தலாக அமைந்து இருக்கிறது. மற்றொரு மிக முக்கிய விஷயம், நன்றாக படித்த இளைஞர்களை பயங்கரவாதத்தை நோக்கி செல்வதற்கு மூளைச்சலவை செய்யப்படுகிறது.
எனவே உலகத்தின் முன் பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் மிகப்பெரிய கவலை அளிக்கும் அம்சங்களாக உள்ளன.
பயங்கரவாதம் என்பது மிகவும் ஆபத்தானது. நல்ல பயங்கரவாதிக்கும், மோசமான பயங்கரவாதிக்கும் இடையேயான செயற்கையான வேறுபாடும், பயங்கரவாதத்தைப் போன்றே ஆபத்தானது.
பயங்கரவாத அச்சுறுத்தலில் இந்தியாவின் நிலை நன்றாக தெரிந்த ஒன்றுதான். நான் அதை விளக்கப்போவது இல்லை.
சில நாடுகள் தங்களை மையப்படுத்திய அணுகுமுறையை கொண்டு உள்ளன. பயங்கரவாதமும், வன்முறையும் பரவினால், இந்த உலகம் இன்னும் பிளவுபடும்.
அமைதியும், ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பும் சமகால உலக அமைப்பில் மிகப்பெரிய சவால்களாக மாறி வருகின்றன. உலகமயமாதலுக்கு எதிராக பாதுகாப்புவாதம் தலை தூக்குகிறது. இந்தப்போக்கின் காரணமாக இரு தரப்பு, பல தரப்பு வர்த்தக பேச்சுகள் கிட்டத்தட்ட முடங்கிப் போய் உள்ளன.
குறுகிய உள்நாட்டு வட்டத்தை விட்டு வெளியே வந்து பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், பெருகிவரும் பாதுகாப்பு வாதம் ஆகியவற்றின் ஆபத்துக்கு எதிராக நாம் ஒன்றுபடுவோம். நாம் ஒரு சுதந்திரமான சொர்க்கத்தை உருவாக்குவோம். அதில் பிரிவினையும், பிளவும் இல்லாத ஒத்துழைப்பு இருக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக