புதன், 24 ஜனவரி, 2018

பத்மாவதி .. இந்து வெறியர்கள் பள்ளி பேருந்து மீது .. சிறுவர்கள் கதறல் ... விடியோ

பத்மாவத் படத்திற்கு எதிராக போராடிவரும் கர்னி சேனாவினர் பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். பத்மாவத் படத்திற்கு நிலவியை தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியதை அடுத்து, வடமாநிலங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. திரையரங்குகள் மீது தாக்குதல், சாலை மறியல் வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் வட மாநிலங்களில் பரவி வருகிறது. படத்திற்கு எதிராக தீவிரமாக போராடி வரும் கர்னி சேனா அமைப்பினர் படத்தை திடையிட அனுமதிக்க மாட்டோம் என கூறிஉள்ளனர். அவர்களால் வன்முறை சம்பவங்களும் நடத்தப்பட்டு வருகிறது. வன்முறை சம்பவங்கள் பரவி வருகிறது. போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
அரியானாவில் நாளை படம் திரைக்கு வர உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் குண்டர்கள் குர்கானில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது என அரியானா மாநில அரசு தெரிவித்து உள்ளது. ஆனால் சாலைகளில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.



குர்கானில் ஜிடி கோயங்கா பள்ளியின் பேருந்து மீது கர்னி சேனா குண்டர்கள் தாக்குதலை நடத்தி உள்ளனர். 5 வயது குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து மீது குண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். பள்ளி குழந்தைகள் உடனடியாக கீழே அமர்ந்து அழும் காட்சிகள் வெளியாகி உள்ளது. அவர்களை ஆசிரியைகள் சமாதானம் செய்கிறார்கள். பஸ் வேகமாக இயக்கப்படுகிறது, பஸ்சின் கண்ணாடி ஜன்னல்கள் விழும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்று உள்ளது. குழந்தைகள் பயந்து அழும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்று உள்ளது. இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களுடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. கர்னி சேனா தலைவரை கைது செய்ய வேண்டாமா? என கேள்வியும் எழுப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை: