தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடலூர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவான எம்.சி.சம்பத் (58) தமிழக தொழில்துறை அமைச்சராக உள்ளார். அவருக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று அமைச்சர் எம்.சி.சம்பத்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
முதல்வர் ஓ.பி.எஸ்.பன்னீர் செல்வம் விரைந்து சென்று, அமைச்சர் சம்பத்தை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு திரும்பியுள்ளார் என்ற செய்தி டி.வி.யிலும் பிளாஸ் நீயூஸ் ஓடியது, வாட்ஸ்-அப்,களில் காட்டு தீயாக பரவியது, அதிமுக,வினர்கள் மத்தியில் பரபரப்பாக பேசபட்டது சம்பத் உடல் நிலையை பற்றி.
அதையடுத்து, உண்மை நிலவரத்தை தெரிந்துகொள்ள அப்பல்லோ வட்டாரத்தில் விசாரித்தோம், அமைச்சர் எம்.சி.சம்பத் வழக்கமாக ஆறுமாதம் ஒரு முறை உடல் முழு செக்கப் செய்வது வழக்கமானது, அதுபோல் வழக்கமான செக்கப்குதான் அப்போல்லோ மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, முதல்வர் ஓ.பி.எஸ்.பன்னீர்செல்வம் தனது தொன்டை பகுதியில் வலியிருப்பதாக டாக்டரை பார்க்க சென்றார், அப்போது சம்பத் இருப்பதை தெரிந்து மேலேபோய் பார்த்து 15 நிமிடம் பேசிட்டு திரும்பியுள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் அமைச்சர் சம்பத் கொஞ்சம் ஓய்வு எடுக்கவேண்டும் என்று டாக்டர் அட்வைஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
கடலூர் மாவட்டத்தில்தான் தீபா ஆதரவாளர்கள் அதிகமாக உருவாகி வருகிறார்கள், தினந்தோறும் ஒரு நிகழ்ச்சி நடத்திவருகிறார்கள், தீபா ஆதரவாளர்களால்தான் அமைச்சருக்கு டென்ஷன், பி.பி.அதிகமாகியுள்ளது என்கிறார்கள் அதிமுக,வினர். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக