திங்கள், 30 ஜனவரி, 2017

கேரளா மாணவிகள் கைகளில் தமிழச்சி என்ற வாசகம் .. ஜல்லிகட்டு சொல்லி தந்த எழுச்சி

ஜல்லிக்கட்டு மாணவர்களின் போராட்டம் பல கதவுகளை இந்தியாவிற்கு திறந்து விட்டுள்ளது. அதன் ஒரு விளைவு தான்  மொழி கடந்த ஒருமைப்பாடு. இந்தியா என் தாய் நாடு என்கிற பாட நூல் உறுதி மொழி எழுபது வருடங்கள் கழித்து நிஜமாகியுள்ளது. அதை சாதித்து காட்டிய பெருமை தமிழக மாணவர்கள், இளைஞர்களையே சாரும். தமிழக மாணவர்கள் ஒரு பாரம்பரிய விளையாட்டுக்கு போராட்டம் நடத்துகிறார்கள் என்றதும் கேரளா மாணவர்கள் கூட்டமைப்பு விரும்பும் மாணவ, மாணவிகள் தமிழ் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்தது.< பாலக்காடு மாணவர்கள்  மாணவிகள் கோவை சென்னை, மதுரை வந்து குவிந்தனர். நான்காம் நாள் அந்த கண்ணீர் ததும்பும் காட்சி நடந்தது. கோவை கொடீசியா வளாகத்தில் கேரள மாணவிகள் தங்கள் கைகளில் ‘தமிழச்சி’ என்று எழுதச்சொல்லி, கைகளை உயர்த்தி ஜல்லிக்கட்டு வேண்டும் என்று முழக்கமிட்டது காண்போரை கண் கலங்க வைத்து விட்டது. அவர்களிடம் அடிமாடுகள் பற்றி கூறினார்கள் இளைஞர்கள். ஷாக் ஆன கேரளக் காளைகள் நாங்கள் அது குறித்து விவாதிப்போம. அடிமாடுகள் வரத்தை குறைக்க போராடுவோம் என்று கூற மாணவர்கள் ஆர்ப்பரித்தார்கள்.> வாங்க செல்லங்களா..புது இந்தியாவை உருவாக்குங்கள்.லைவ்டே

கருத்துகள் இல்லை: