சினிமா
மீது பற்று கொண்டவர்களுக்காக ‘Cinema Rendezvous' என்ற திரைப்பட கிளப்
ஒன்றை சைலஜா செட்லூர், இயக்குநர் நாகா மற்றும் அருண்மணி பழனி ஆகியோர்
சென்னையில் நடத்தி வருகின்றனர். இந்தக் குழு ஒவ்வொரு இரண்டாம்
சனிக்கிழமையும் ஒரு படத்தை திரையிட்டு அதுபற்றிய உரையாடலில் ஈடுபடுவது
வழக்கம். வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி இவர்கள், கிறிஸ்டோபர் நோலன்
இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘The Prestige' படத்தை திரையிட முடிவு
செய்திருக்கின்றனர். இதன் கலந்துரையாடலுக்கு சிறப்பு விருந்தினராக
‘துருவங்கள் பதினாறு’ படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன்
அழைக்கப்பட்டிருக்கிறார். இந்தத் திரையிடல், மேக்ஸ் முல்லர் பவனில் உள்ள
Goethe Institute -இல் காலை 9.15 மணியளவில் நடைபெறவுள்ளது. ஆர்வம்
உள்ளவர்கள் ரூபாய்.200 செலுத்தி இந்த திரையிடலில் கலந்துகொள்ளலாம். இந்த
கிளப்பில் இணைவதற்கு ஆண்டுச் சந்தாவாக ரூபாய்.2,000 வசூல் செய்யப்படுகிறது.
திரைப்படத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை
பயன்படுத்திக்கொள்ளலாம். மின்னப்மலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக