தெறிக்க விடலாமா? உள்ளாட்சி தேர்தல் மழையில் குள்ள நரிகளின் சாயம் வெளுக்கும் என்பதால் ஒரே தாவு தாவிவிட்டார்கள்.
சட்டப்பேரவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். அதில் உள்ளாட்சி தேர்தல் வரும் ஜூன் மாதம் நடத்தலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் கருதுவதாக சொல்லி சில சப்பை சாக்கை முன்வைத்தார்.
மாணவர்களின் தேர்வை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை, அதுவரை அலுவலகர்களின் பணியை நீட்டிக்க வேண்டும் என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது பெயரளவுக்கான காரணமாகும். சசிகலாவின் வலுகட்டாய என்டரியை தமிழக மக்கள் துளியும் விரும்பவில்லை. இந்நிலையில் தேர்தல் வந்தால் அ.தி.மு.க.வின் ஆட்டம் குளோஸ் கோவிந்தசாமியாகிவிடும்.
தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு மாநகராட்சியையும் அ.தி.மு.க.பிடிக்க முடியாது. இப்படி மக்கள் மனது ஒரு பக்கம், தீபாவின் பாப்புலாரிட்டி மறுபக்கம் என எதிர்ப்பு மழை வெளுத்து வாங்குவதால் சாயம் வெளுத்துவிடும் என அஞ்சுகிறார்கள்.
அதையும் மீறி தேர்தலை சந்தித்தால் மண்ணை கவ்வுவது நிச்சயம். அப்புறம் எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு அரசியல் செய்யமுடியும்? மேலும் பிடுங்கியுள்ள பதவியையும் பறிகொடுக்க வேண்டியதாகிவிடும் என்பதை உணர்ந்துள்ளனர்.
ஆறு மாசம் இல்லீங்க, ஆறு வருஷங்கள் ஆனாலும் எதை ஏத்துக்கனும், எதை விரட்டனும் என்பது மக்களுக்கு தெரியாமல் இல்லை அல்லவா? லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக