வியாழன், 2 பிப்ரவரி, 2017

23000 கோடியில் 23000 வீடுகள் ... ஆக ஒருவீட்டுக்கு 23 ஆயிரம் மட்டும்தான் ! கழிப்பறையாவது கட்ட முடியுமா? காகித பூ வாசம் தராது

யோவ்...எப்ப பார்த்தாலும் பட்ஜெட்ட கொறை சொல்றதே பொழப்பா போச்சி...
சரி இனிமே சொல்லலைங்க...ஒரு கோடி பேருக்கு வீடு கட்டித்தரப்போறோம்ன்னு சொல்லியிருக்காங்க... அதைப்போயி குறை சொல்வேனா..!
அதானே...நல்ல திட்டமாச்சே.. இதுக்கு எவ்ளோ நிதி ஒதுக்கியிருக்காங்க..?
கொஞ்சநஞ்சமில்லீங்க...23000 கோடிங்க..!
இவ்ளோதானா..!
என்னங்க...இவ்ளோ ஒதுக்கியிருக்காங்க...நீங்க அசால்ட்டா இவ்ளோதானான்னு கேக்குறீங்க..
யோவ்..அறிவிருக்காயா ஒனக்கு...23000 கோடியை ஒரு கோடி வீட்டுக்குன்னு பிரிச்சா 23000 ரூவா தானேய்யா வருது...

அய்யோ...என்னங்க இது...!!
என்ன நொன்னைங்க...இதவச்சிக்கிட்டு கக்கூஸ்கூட கட்டமுடியாதுய்யா..அவன் சொன்னான்னு சொம்பை தூக்கிவச்சிக்கிட்டு ஆடுறே...
இருந்தாலும் பட்ஜெட்டை குறை சொல்லக்கூடாதுங்க...
யோவ்...காலையில வேணாம்..கம்முனு போயிடு.. முகநூல் பதிவு கருப்பு கருணா
படஜெட்டில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 3.18லட்சம் கோடி வரிதள்ளுபடி! பாவம்பா...சோத்துக்கே ஜிங்கியடிக்குறாங்களாம்..பொழச்சிக்கட்டும் விடுங்க...!

கருத்துகள் இல்லை: