சென்னை: மெரினா புரட்சியைத் தொடர்ந்து போலீசார் வெறியாட்டத்துக்கு எதிரான வன்முறை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அதை திசைதிருப்பும் வகையில் பேட்டி தருவதா? என கூறி மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மெரினா புரட்சியை ஒடுக்க சென்னை போலீசார் கொடூரமான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இதில் மாணவர்கள், மீனவர்கள் பலரும் கடுமையாக தாக்கப்பட்டனர். மீனவர் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது வன்முறை சம்பவங்களை சில சமூக மற்றும் தேசவிரோதிகள் கட்டவிழ்த்துவிட்டதாக போலீசார் தொடர்ந்து வருகின்றனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது போலீசாரின் தாக்குதல் குறித்து தவறான விளக்கம் தருவது திசை திருப்புவதாகும் என கூறி சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக