சசிகலா, தினகரன் விடுவிக்கப்பட்ட இந்த 3 வழக்குகளை எதிர்த்து அமலாக்க துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதே சமயம் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ரிம்சேட் , சபீக் பே ஆகிய நிறுவனங்கலுக்கு, அன்னிய செலாவணி விதிகளை மீறி 5 லட்சம் அமெரிக்க டாலர் பரிமாற்றம் செய்ததாகவும், சிங்கப்பூர் நிறுவனத்துக்கு 10.45 லட்சம் சிங்கப்பூர் டாலர் பரிமாற்றம் செய்ததாகவும் , 36.36 அமெரிக்க டாலர் சட்ட விரோத மாக பரிமாற்றம் செய்ததாகவும் வழக்குகள் அமலாக்க பிரிவு பதிவு செய்திருந்தது. சசிகலா மீது தொடரப்பட்ட இந்த 3 வழக்குகளில் இருந்து விடுவிக்க எழும்பூர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சசிகலாவை விடுவிக்க முடியாத இந்த 3 வழக்குகளிலும் தன்னை விடுவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.
அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்து நிலையில் , இந்த 6 மேல்முறையீடு வழக்கில்,சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சொக்கலிங்கம் இன்று தீர்ப்பளித்தார். அதில், சசிகலாவின் மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்தார். மேலும் சசிகலா மற்றும் தினகரன் 3 வழக்குகளில் எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றம் விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்குகளின் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் தற்போது தினாகரன்,நடராஜன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகளின் விசாரணை வேகமேடுத்து வருகிறது. தற்போது சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு மேலும் கார்டன் தரப்பை அதிர்ச்சி அடையவைத்திருக்கிறது. <">- சி.ஜீவா பாரதிநக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக