வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

தமிழ்நாடு இளைஞர் கட்சி.... நோக்கம் என்ன? மெல்லிய சந்தேக கோடுகள்?

Tamilnadu youth party : திராவிட கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளுக்கும், இளைஞர்கள் ஒரு வாக்கு வங்கி மட்டுமே. வாக்கை தாண்டி அவர்கள் எந்த அரசியல் தெளிவையும் பெற்றுவிடக்கூடாது என்பதில் கட்சி வேறுபாடுகள் தாண்டி மிக கவனமாக இருக்கிறார்கள்.ஏன் இவர்கள் இளைஞர்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த அஞ்சுகிறார்கள்...? அவர்களுக்கு நன்கு தெரியும், இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால், அனைத்தையும் கேள்வி கேட்பார்கள் என்று. தமிழக இளைஞர்களை அரசியலற்றவர்களாக ஆக்கியதில் பெரும் பங்கு, திராவிட கட்சிகளுக்கு உண்டு.
திராவிட கட்சிகள் என்று எழுந்த மானத்திலே தாங்கள் ஆரம்பித்து இருப்பது நல்லதல்ல. தங்களின் குறி திராவிட முன்னேற்ற கழகம்தான் என்று கருதுவதற்கு போதிய இடம் இருக்கிறது .ஏனினில் அதிமுகவை ஒரு திராவிட கட்சியாக எம்ஜியாரோ ,ஜெயலலிதாவோ அல்லது சசிகலா பன்னீர்செல்வமோ எந்த காலத்திலும் காட்டி கொண்டதில்லை. எம்ஜியாரின் அண்ணாஇசமும் ஜெயலலிதாவின் மண்சோறு காலில் விழுவதுவும் திராவிட கட்சி பாரம்பரியமா?  பாஜக அல்லது காங்கிரசுக்கு ஒரு பீ டீம் போன்றுதான் அவர்களின் வரலாறு இருக்கிறது.    திராவிட கட்சிகள் என்று தாங்கள் ஆரம்பிப்பது நிச்சயம் பார்ப்பன, ஆதிக்க சாதி இந்துத்வா பின்னணியில் இருப்பதாக சந்தேகம் எழுவது இயல்பு.  தற்போது தமிழின உணர்வாளர்கள் என்று கூவி கொள்வோரும் இது போன்ற ஒரு  பின்னணியில் உள்ளதாகவும்  சந்தேகம் வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை . திராவிட முன்னேற்ற கழகம், திராவிட கழகம் போன்றவைதான் மக்கள் மத்தியில் அரசியல் உணர்வை வளர்த்தது . நீங்கள் அதிமுகவிற்கு பொருந்த கூடிய குற்றச்சாட்டுகளை திராவிட கட்சிகள் என்ற கணக்கில் சேர்ப்பது மிகவும் கபட நோக்கம் கொண்டது . நல்ல நோக்கங்களுக்காக முன்வந்த லட்சோப லட்சம் இளைஞர்களை    மக்களை ஏமாற்றி அரசியல் செய்து விடலாம் என்று கணக்கு போட்டால் அது ஏமாற்றமாகி விடும் . மக்கள் இப்போது அந்த அளவு முட்டாள்கள் அல்ல.. அந்தரங்க சுத்தி இல்லாவிடில் நோக்கம் எதுவுமே நிறைவேறாது. வெறும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்?

 
இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சியில் உத்வேகம் பெற்று ஆட்சியை பிடித்த திராவிட கட்சி, மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டால் தமக்கு ஆபத்து என்று அஞ்சுவது தெளிவாக தெரிகிறது. அதனால், ஒவ்வொரு முறையும், அனைத்து தடைகளையும் மீறி, ஒரு பெரும் திரள் இளைஞர்கள் கூட்டம், சமூக காரணங்களுக்காக அணி திரளும் போது, தனது உளவு அமைப்புகளை வைத்து அதை ஒடுக்குகிறது, நசுக்குகிறது.



அரசியல் பேசுவது தீட்டு என்ற மனநிலையை, அவர்கள் வெற்றிகரமாக உண்டாக்கி, ஒரு தலைமுறை இளைஞர்களையே டி-பொலிடிசைஸ் ( Depoliticise) செய்துவிட்டார்கள்.
"அரசியல் பற்றிய இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே நமக்கு வெற்றி கிட்டும்."
இந்நிலை மாறவேண்டும், மாற்றிக்காட்டுவோம், கட்சியில் இணைய .tamilnaduyouthparty.com என்ற இணையத்தளத்தில் பதியவும்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: