ஏழு
இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடைவிதித்து,
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்நிலையில் ஒரு லட்சம் விசாக்கள்
ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்றும், தீவிரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமையன்று 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்திவைத்து உத்தரவிட்டார். இதனடிப்படையில், 1 லட்சம் விசாக்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
ஏமனைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், கடந்த சனிக்கிழமையன்று டல்லஸ் விமான நிலையத்தில் இருந்து எத்தியோப்பியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் மூலம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ள விபரம் குறித்து தெரியவந்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்
விசா ரத்து குறித்து அமெரிக்கா மறு ஆய்வு செய்துவருவதாக அரசு வழக்கறிஞர் அலெக்சாண்ட்ரியா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக