கடும் மன உளைச்சலில் இருகிறது எந்திரன் 2.0படக்குழுவினர். காரணம் இரண்டு. ஒன்று படத்தின் மெகா மெகா பட்ஜெட்.
இரண்டாவது மாணவர்களின் ஜல்லிகட்டுப் போராட்டம். படத்திற்கும் ஜல்லிக்கட்டிற்கும் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா?
இருக்கிறது. சமீப காலமாக ரஜினி தமிழகத்தில் எந்தப் பிரச்சனைக்கும் குரல் கொடுப்பதே இல்லை.
காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழர்களை கண் மூடித்தனமாக கன்னடர்கள் தாக்கிய போது வாய் மூடி அமைதியாக இருந்து விட்டார்.
பிரகாஷ்ராஜ் கூட கன்னடர்களை கடுமையாக கண்டித்தார். ஆனால், ரஜினி வாயே திறக்கவில்லை.
அங்கேயே
ரஜினி ரசிகர்களே ரஜினியை வலைத்தளங்களில் வசை பாடினார்கள். அடுத்து,
பிரதமர் மோடி செல்லா நோட்டு விஷயத்தை அறிவித்த போது ரஜினி வாய் திறந்தார்.
புதிய இந்தியா பிறந்து விட்டது என்றார்.
கால் கடுக்க கொளுத்தும் வெயிலில் நின்ற தமிழக மக்கள் உச்ச கட்ட கோபம் கொண்டார்கள் ரஜினி மீது.
இப்போது
மாணவர்கள் போராட்டம் பெரும் எழுச்சியை சந்தித்த போது நான்கு நாட்கள் வாயே
திறக்காதவர், ஐந்தாம் நாள் தடியடி நடந்த அன்று மாணவர்கள் அமைதியாக களைந்து
செல்ல வேண்டும் என்றார்.
அவ்வளவு தான்.
ரஜினி ரசிகன் உட்பட மொத்த தமிழக மக்களும் கடுப்பின் உச்சகட்டத்திற்கு
போனார்கள். ரஜினி மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய் விட்டது. இந்த
நிலையில் எந்திரன் டூ படம் நிறைவடைந்தது. லைவ்டே
அனேகமாக
ஏப்ரல் மாதம் படம் ரலீஸ் ஆகும் என்று தெரிகிறது. அந்த சமயம் முந்தைய ரஜினி
படங்கள் போல ரஜினி படங்களுக்கு வரவேற்பும், வசூலும் இருக்குமா என்பது
சந்தேகமே.
குறைந்த பட்சம் மாணவர்களுக்கு வாழ்த்தாவது சொல்லி இருக்கலாம் என்பது மக்கள் எண்ணம் போலவே படக்குழுவினரும் நினைத்திருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக