வியாழன், 2 பிப்ரவரி, 2017

துரைமுருகன் : ஐந்து ஆண்டுகளுக்கு பன்னீர்செல்வமே முதல்வராக இருக்கவேண்டும் ! ஆதரவு தருவோம் !

பக்கத்து மாநில முதல்வர்கள் சர்ச் வாசல்ல உட்கார்ந்ததையும் வாக்கிங் போனதையும் படம் பிடித்து போட்டு இப்படி முதல்வர்கள் தமிழகத்துக்கு கிடைக்காதா என போஸ்ட் போட்டு திரிந்தவர்கள்!! இன்றைய நம் முதல்வரை கேலி செய்கிறார்கள்!! என்னத்த சொல்ல!!!!
பன்னீர் செல்வமா? பணிவு செல்வமா? 
 சென்னை: ''ஐந்து ஆண்டுகளுக்கு, பன்னீர்செல்வமே முதல்வராக இருக்க வேண்டும்; தேவைப்பட்டால், நாங்கள் ஆதரவு தருகிறோம்,'' என, சட்டசபையில், தி.மு.க., துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்தார். இதை, தி.மு.க.,வினர் மேஜையை தட்டி வரவேற்றனர்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் முழித்தனர். மனமில்லை: சட்டசபையில், நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் பேசும்போது, ''அரசு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சி தலைவருக்கு பாராட்ட மனமில்லை,'' என்றார். ஆதரவு: அப்போது, துரைமுருகன் எழுந்து, ''நான் மனதார உங்களை பாராட்டுகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு, நீங்களே முதல்வராக இருக்க வேண்டும். உங்கள் பின்னால் உள்ள சக்தியை பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், நாங்கள் ஆதரவு தருகிறோம்,'' என்றார். உடனே, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், மேஜையை தட்டி, மகிழ்ச்சி தெரிவித்தனர்.    சசி ஏதாவது முயற்சி செய்து ஆட்சியின் அமர நினைத்தால், ஏன் சும்மா ஒரு கொஞ்சம் மலை ஆதரித்தால் போதும், பன்னீரை அங்கே அதே பதவியில் அமரவைத்து விடுவார்கள், அப்புறம் சசியும் சரி, நட்டுவும் சரி பேந்த பேந்த முழிக்க வேண்டியதுதான்.
அ.தி.மு.க.,வினர், என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தனர். மகிழ்ச்சி: பின், காங்கிரஸ் - எம்.எல்.ஏ., விஜயதாரணி பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத நிலையை, நினைத்து பார்க்கவே கடினமாக உள்ளது. அவரது பிரம்மாண்டம், பேச்சு, எதையும் மறக்க முடியவில்லை. தற்போது, எளிமையான முதல்வரை பெற்றுள்ளோம். அவர் பேசும்போது, பலர் குறுக்கீடு செய்தனர். அதற்கு, முதல்வர் பதில் அளித்தார். ஜனநாயகம் இருக்க வேண்டும் என எதிர்பார்த்த, என்னை போன்றவர்களுக்கு, இது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு விஜயதாரணி பேசினார்.தினமலர்

கருத்துகள் இல்லை: