மின்னம்பலம் : டெல்லியில்
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்துகிறது.
அவருக்கும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்குமிடையே
மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் முறைகேடு நடந்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது. தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்ததில், நன்கொடை தொகையில் ரூ.27 கோடி முரணாகவும், தவறாகவும் இருப்பதாகத் தெரிவித்தது. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று தேர்தல் கமிஷனுக்கு வருமான வரித்துறை பரிந்துரை செய்தது.
இதுகுறித்து பிரதமர் மோடியை ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய மோடி துடிக்கிறார். அவர் வெட்கம்கெட்ட சர்வாதிகாரி. மோசமான, அசிங்கமான தந்திரத்தை கையாள்கிறார். கோவா, பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா மோசமான தோல்வியைத் தழுவும். வெற்றிபெறும் கட்சியான ஆம் ஆத்மியின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய முயற்சிக்கிறார்" என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக