திங்கள், 30 ஜனவரி, 2017

பிரச்சாரம் செய்ய மாட்டேன் : முலாயம்சிங் யாதவ்


உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, சமாஜ்வாதி கட்சிக்கு தான் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என கட்சியைத் தொடங்கி நீண்டகாலமாக வழிநடத்திவந்த முலாயம்சிங் யாதவ் தெரிவித்திருக்கிறார். சமாஜ்வாதி கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டதை தான் விரும்பாததே இதற்குக் காரணம் எனக் கூறியிருக்கிறார். ‘சமாஜ்வாதி கட்சி தனித்துப் போட்டியிட்டிருந்தாலும் வென்றிருக்கும். இந்தக் கூட்டணிக்கு ஒரு தேவையும் இல்லை. நான் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன். இதற்கு நான் பிரச்சாரம் செய்ய மாட்டேன்’ என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
‘காங்கிரஸ் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்தது. ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காக எதுவுமே செய்யவில்லை. நான் இந்த தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டேன்’ எனக் கூறிய முலாயம், தன் சொந்தக் கட்சியில் இருந்து மட்டுமே அமைச்சர்கள் வரவிருந்த வாய்ப்பை அகிலேஷ் நாசம் செய்துவிட்டார் என குறைசொல்லியிருக்கிறார். இதுகுறித்து சமாஜ்வாதி உறுப்பினர் ஜுஹி சிக் பேசும்போது, ‘நாங்கள் அனைவரும் நேதாஜியோடு (முலாயம்) இருக்கிறோம். எங்களுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டாம் என அவர் முடிவு செய்தால், அவருடைய ஆசீர்வாதங்களை வைத்துக் கொண்டு முன்னேறுவோம்’ என்றார்.

பாஜக-வும் ஆர்.எஸ்.எஸ்-ஸும் வெறுப்பு அரசியலை பரப்புவதைத் தடுக்க, தங்கள் கூட்டணி செயல்படும் என ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் லக்னோவில் நடந்த ஊடகச் சந்திப்பில் தெரிவித்ததற்குப் பின்பு முலாயம்சிங் யாதவ் இவ்வாறு பேசியிருக்கிறார். நேற்று லக்னோவில் நடந்த இந்த ஊடகச் சந்திப்புதான் சமாஜ்வாதியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்தபிறகு நடந்த முதல் ஊடகச் சந்திப்பு ஆகும். minnambnalam

கருத்துகள் இல்லை: