வியாழன், 2 பிப்ரவரி, 2017

சித்தப்பா கலைஞரிடம் கெஞ்சிய ராதாரவி – சசிகலா அதிர்ச்சி?

நடிகர் ராதாரவி திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். திடீரென திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானார். அதிமுகவில் சேர்ந்த பிறகு ஜெயலலிதா அவரை எம்.எல்.ஏ.வாக்கினார். 2009ல் மீண்டும் அதிமுகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் ராதாரவி. பின்னர் டெல்லியில் ராகுல்காந்தியையும், திமுக தலைவர் கருணாநிதியையும் சந்தித்தார். ஆனால் 2010ல் அதிமுகவில் இணைந்தார். தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியில் நடந்து குழப்பமான அரசியலால் அதிமுகவில் இருந்து ஒதுங்கியுள்ளார். இந்நிலையில், பழனியில், நடிகரும் திமுக நிர்வாகியுமான வாகை சந்திரசேகர் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதாரவி பேசுகையில், தற்போது நான் எந்த தலைமையும் ஏற்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும், விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பதாகவும் கூறினார். இந்நிலையில் நான் சித்தப்பாவாக கருதும் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெறுவார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்துவிட்டது. சிலர் திமுகவிற்கு எப்போது வருவீங்கன்னு கேட்கிறாங்க. அதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார். ராதாரவியின் இந்த சூசகமான பேச்சு, சசிகலா தலைமையை விரும்பவில்லை. அதனால் திமுகவில் இணைய போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் ராதாரவி ஸ்டாலினை பாராட்டி பேசியிருப்பது, சசிகலா மற்றும் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. லைவ்டே


கருத்துகள் இல்லை: