வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

R.S.S.பாஜக ஆகிய நான் தமிழக ஆளுங்கட்சியாக ...

மோடி வழங்கிய பன்னீரின் "அதிமுக"!.. பயத்தில் மன்னார்குடி . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக பதவியேற்ற பன்னீர்செல்வம், தனது அதிரடி நடவடிக்கைகளால் ஜெயலலிதாவை போல் உருமாறி வருவதை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்கிறது மன்னார்குடி கும்பல். மத்திய அரசின் உதவியுடன் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் பன்னீர்செல்வத்திற்கு மன்னார்குடி கும்பல் நெருக்கடி கொடுத்து கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்றபோது அவரது காலில் விழுந்து அதிரவைத்தார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் பன்னீர்செல்வத்தின் இந்த பணிவை மத்திய அரசு ரசிக்கவில்லை. பன்னீர்செல்வம் சமீபத்தில் டெல்லி சென்ற போது, நீங்கள் ஒரு மாநிலத்தின் முதல்வர்; எதற்காக சசிகலா உறவினர்களிடம் பயப்படுகிறீர்கள்? நாங்கள் இருக்கிறோம் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இருந்து திரும்பியபோது போயஸ் கார்டன் போனார். ஆனால் அதன்பின்னர் அந்த பக்கமே முதல்வர் ஓபிஎஸ் எட்டிப்பார்க்கவில்லை. அத்துடன் தன்னுடைய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக மனைவியுடன் குடியரசு தின நிகழ்ச்சிக்கு மேடையேறினார் முதல்வர் ஓபிஎஸ்.


முதல்வராக கருணாநிதி இருந்தபோது கூட விவிஐபி பகுதியில்தான் அவரது குடும்பத்தினர் அமர்ந்திருப்பர்.
சட்டசபையில் ஆளுநர் உரையின் போது ஜெயலலிதாவின் இருக்கையில் முதல்வர் ஓபிஎஸ் அமர்ந்ததை பார்த்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேபோல் பொதுவாக வெளியூர்களில் சர்கியூட் ஹவுஸில்தான் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தங்குவது வழக்கம்.

இந்த முறை மதுரை சென்றபோது ஜெயலலிதாவுக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டதோ அதை தமக்கு செய்ய வேண்டும் என கண்டிப்பான உத்தரவு போட்டிருக்கிறார் முதல்வர் ஓபிஎஸ். பன்னீர்செல்வத்தில் அதிரடியான நடவடிக்கைகளால் மன்னார்குடி கும்பல் அதிர்ச்சிக்குள்ளாயிருப்பதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லைவ்டே

கருத்துகள் இல்லை: