பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பட்ஜெட்டில் எந்த இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளளார்.
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற பட்ஜெட் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய ப. சிதம்பரம், வரும் நிதியாண்டில் வருமான வரி எவ்வளவு வசூலிக்கப்படும் என்று கூட நிதியமைச்சரால் குறிப்பிட முடியவில்லை என தெரிவித்தார்.
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ரொக்கப் பணத்தை நம்பியே உள்ளதாக கூறிய சிதம்பரம், தினசரி வருமானத்தை நம்பியே 30 முதல் 50 கோடி மக்கள் வாழ்க்கையை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட விவசாயம், தொழிற்சாலைகள், சிறு குறு நிறுவனங்கள் பயன் அடையும் வகையில் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை என சிதம்பரம் புகார் தெரிவித்தார். மறைமுக வரியை குறைப்பதன் மூலம் ஏழை எளிய மக்கள் பாதிப்படைவது குறையும் என பட்ஜெட்டுக்கு முன்பே தாம் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம், இந்த பிரச்சனையில், மத்திய அரசு மிகப் பெரிய தவறை செய்து விட்டதாகவும் சிதம்பரம் விமர்சித்தார். நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக