புதன், 1 ஜூன், 2016

ஜாதியா ? அப்படீன்னா? இப்படியும் ஒரு புதுமண தம்பதிகள் ... சென்னையில்...

இருவரும் என்ன ஜாதி’ –
கலந்து கொண்ட எங்களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல, மணமக்களுக்கே தெரியாது.
திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், வேறு வேறு ஜாதியைச் சேர்ந்த இருவருக்கும் திருணம் ஏற்பாடுகள் செய்தனர்.
மணமக்களின் பெற்றோர்களும் ‘மணமகன், மணமகள் தன் ஜாதியைச் சேர்ந்தவர் இல்லை’ என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு, ‘என்ன ஜாதி?’ என்ற கேள்வியையே தவிர்த்து விட்டனர்.
ஜாதியைக் கேட்டு மணமகனின் தலையை வெட்டுகிற தலித் விரோதிகளுக்கும், ஜாதிக்குள் தமிழனைத் தேடும் இனவாதிகளுக்கும்,
‘உட்ஜாதியைக் கூட ஒத்தக் கொள்ள முடியாது. தன் ஜாதியிலேயேதான் தலைவர் வேணும்’ என்று அடம் பிடிக்கிற ‘ஜாதி ஒழிப்பு’ அறிவாளிகளுக்கும் இந்தத் திருமணம் ஒரு பாடம்.

சென்னையை அடுத்தப் பொன்னேரியை சேர்ந்த சுதாகரனுக்கும் திருச்சி பாலக்கரை இளையராணிக்கும் 29-05-2016 அன்று திருச்சியில் திருமணம் நடந்தது.
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்தி வைத்தார். நான் வாழ்த்துரை. இன்னொரு முக்கியமான செய்தி, மதியம் பிரியாணி விருந்து. மதிமாறன்

கருத்துகள் இல்லை: