செவ்வாய், 31 மே, 2016

ஈஸ்வரன்: அரவக்குறிச்சி தஞ்சாவூரில் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பி தரவேண்டும்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் திமுக, அதிமுக
தவிர மற்ற வேட்பாளர்கள் செய்த செலவு திருப்பிக் கொடுக்க வேண்டும் என கொமுக கோரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளில் மட்டும், வாக்காளர்களுக்கு திமுக வேட்பாளர் கே.சிபழனிசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தாக கூறி, தேர்தலை தள்ளிவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர்களக்கு பணம் கொடுத்ததாக கூறி, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளை வரவேற்கிறோம்.
இது திமுக அதிமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த தண்டனையாகவே பார்க்கிறோம்.திமுக, அதிமுக வேட்பாளர்கள் தவிர மற்ற வேட்பாளர்கள் தவறு செய்யவில்லை. அப்படி இருக்கையில், மற்ற வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை தேர்தல் ஆணையம் திருப்பித் தரவேண்டும். தேர்தலில் செலவழித்த பணத்தை திருப்பிக் கேட்க அனைத்து வேட்பாளர்களுக்கும் உரிமை உள்ளது.மீண்டும் தேர்தல் வரும் போது, நாங்கள் மீண்டும் செலவு செய்ய வேண்டும். அதற்கு பணம் வேண்டும். எனவே, இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் கணிவுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.<>ஈஸ்வரனின் கோரிக்கையை திமுக, அதிமுக வேட்பாளர்கள் தவிர மற்ற வேட்பாளர்கள் வரவேற்கிறார்களாம். இதனால் ஈஸ்வரனின் கோரிக்கைக்கு ஆதரவு குரல் பெருகி வருகிறது.<">இந்த தகவல் அறிந்த தேர்தல் ஆணையம் கடும் அதிர்ச்சி அடைந்து, இந்தியாவிலேயே தேர்தல் ஆணையத்திடமே பணம் கேட்டும் கட்சிகள் தமிழகத்தில் தான் உள்ளது என தனது அதிர்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உள்ளதாம்.  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: