வியாழன், 2 ஜூன், 2016

570 கோடி- 3 கண்டேயினர்கள்.. நக்கீரன் மீது அவதூறு வழக்கு... ஜெயலலிதாவுக்கு களங்கமாம்?


தமிழக சட்டசபை தேர்தலின் போது கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட ரூ.570 கோடி விவகாரத்தில் ஜெயலலிதா குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூறி நக்கீரன் பத்திரிகை மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது தேர்தல் சமயத்தில் திருப்பூரில் 570 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரியில் தேர்தல் ஆணையத்தால் பிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை தொடர்புபடுத்தி நக்கீரன் வார இதழில் செய்தி வெளியானது.இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் நக்கீரன் ஆசிரியர் கோபால், செய்தியாளர்கள் பிரகாஷ் மற்றும் அருண் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அரசின் முதல் அவதூறு வழக்கு இதுவாகும், இந்த மனுவில் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறாக நக்கீரன் வார இதழில் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை: