ஞாயிறு, 29 மே, 2016

30 சதவீத பெண்கள் சிறுவயதில் திருமணம்... அதிர்ச்சி தகவல்

கொடுமை! பெண்களுக்கு சிறுவயதில் திருமணம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலம்; புதுடில்லி: இந்தியாவில், 30 சதவீத பெண்கள், 18 வயது நிறைவதற்கு முன் திருமணம் செய்து கொள்வதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் பலர், 10 வயது கூட நிறைவடையாதோர் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. நம் நாட்டில், பெண்ணின் திருமண வயது, 18 ஆகவும், ஆணின் திருமண வயது, 21 ஆகவும் உள்ளது. இந்த வயதுக்கு முன் திருமணம் செய்வது, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ், குற்றமாக கருதப்படும்.     நானறிந்தவரை நம் மாநிலத்திலேயே பெரும்பாலான இஸ்லாமியப் பெண்களுக்கு 15 அல்லது 16 வயதுக்குள்ளே திருமணம் நடக்கிறது இந்தப் பெற்றோரில் அரசு ஊழியர்களும் அடக்கம் ஜமாத்துக்கள் மீதுள்ள பயத்தால் போலீஸ் அவர்கள் மீது நடவடிக்கையெடுக்க தயங்குகிறது வாக்குவங்கிக்கு பயந்து அரசியல் வாதிகளும் சுய மரியாதை இயக்கத்தினரும் இதனைக் கண்டுகொள்வதில்லை அதுபோல கிராமத்து இந்து கிறித்தவ ஏழைகளும் ஊர் ரவுடிகளின் பாலியல் தொந்தரவுக்கு பயந்து 15 வயதிலேயே திருமணம் செய்து வைப்பது இன்னுமுள்ளது...
இந்நிலையில், 'நாட்டில், தற்போது திருமணமாகும் பெண்களில், 30 சதவீதத்துக்கு மேல், 18 வயது நிரம்பாதோர்' என, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மக்கள் தொகை கணக்கீடு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
வற்புறுத்தலால்...இதுபற்றிய விவரம் வருமாறு:இந்தியாவில், ஹிந்து, முஸ்லிம் ஆகிய மதங்களை சேர்ந்த பெண்களில், 30 சதவீதம் பேர், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட, 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து
கொள்கின்றனர். பெரும்பாலும், அவர்களின்

பெற்றோர்களின் வற்புறுத்தலால் இதுபோன்ற திருமணங்கள் நடக்கின்றன. இதனால், கர்ப்பகால பிரச்னை, குடும்ப வன்முறை போன்ற காரணங்களால், இப்பெண்களில் பலர் உயிரிழக்க நேரிடுகிறது.ஹிந்துக்களில், 31.3 சதவீத பெண்களும், முஸ்லிம்களில், 30.6 சதவீத பெண்களும், 17 அல்லது அதற்கு குறைந்த வயதில் திருமணம் செய்கின்றனர். குறைந்த வயதில் திருமணம் செய்யும் ஹிந்து பெண்களில், 6 சதவீதம் பேருக்கு, 10 வயது கூட ஆகவில்லை; முஸ்லிம்களில், 5 சதவீதம் பெண்கள், 10 வயதுக்கு முன் திருமணம் செய்கின்றனர்.

சீக்கியம், கிறிஸ்தவம், பவுத்தம், ஆகிய மத பிரிவுகளில், இளம் வயது திருமணங்கள் குறைவாகவே நடக்கின்றன. குறைந்துள்ளதுகடந்த, 2001ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 18 வயதுக்கு முன் திருமணம் செய்த பெண்கள், 43 சதவீதம் பேர். இது, 2011ல், 30 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 1.5 கோடி குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன.
1929ல் சட்டம்: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1929ல், இந்தியாவில், குழந்தைத் திருமணங்களுக்கு முதன்முதலில் தடை விதிக்கப்பட்டது. குழந்தை திருமண தடை சட்டப்படி, பெண்களின் திருமண வயது, 14 ஆகவும், ஆண்களின் திருமண வயது, 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. 2006ல், திருமண வயது,பெண்களுக்கு, 18 ஆகவும், ஆண்களுக்கு, 21 ஆகவும் உயர்த்தப்பட்டது.
தடைபடும் கல்வி: குழந்தைத் திருமணங்களால், பெண் குழந்தைகளின் கல்வி தடைபடுகிறது. சிறுவயதில் திருமணமாகும் பெண்கள், போதிய படிப்பறிவு இல்லாததால், கணவர் மற்றும் குடும்பத்தாரின் கொடுமைகளுக்கு எளிதில் ஆளாக நேரிடுகிறது. சுயமாக சம்பாதிக்கும் திறனின்றி, வாழ்நாள் முழுவதும், பிறரை நாடும் சூழ்நிலைக்கு, பெண்கள் தள்ளப்படுகின்றனர்.
மரண தண்டனை: 'யுனிசெப்' எனப்படும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசரகால நிதியம், 'குழந்தைத் திருமணங்கள், சிறுமிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை' எனக் கூறியுள்ளது. தமக்கு பிறக்கும் குழந்தைகளை, உடல்ரீதியில் தாங்கும் சக்தி கிடைக்கும் முன்பே, சிறுமிகளுக்கு திருமணம் செய்வதால், அச்சிறுமிகள் உயிரிழக்கும் அபாயம் அதிகமாக உள்ளதென, யுனிசெப்எச்சரித்துள்ளது.
பல தலைமுறைகள் கடந்த பின்னும், குழந்தைத் திருமண வழக்கத்தை, சட்டத்தால் தடுக்க முடியாமல் போவது, அதிர்ச்சிகரமாக உள்ளது. நாடு முழுவதும், இந்த வழக்கம் பரவலாக காணப்படுகிறது.

-ரஞ்சனா குமாரி

சமூக ஆராய்ச்சி மைய இயக்குனர் - டில்லி   தினமலர்.com

கருத்துகள் இல்லை: