திங்கள், 30 மே, 2016

கிரண் பேடி- எம் எல் ஏ மாறி மாறி காலில் விழுந்த கதை... காலில் விழும் கலாச்சாரத்துக்கு செருப்படி?


புதுச்சேரி: மற்றவரின் காலில் விழக் கூடாது என அறிவுறுத்தும் வகையில், தன் காலில் விழுந்த பெண் சட்டமன்ற உறுப்பினரின் காலில் கிரண்பேடி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மாநிலத்தின் புதிய கவர்னராக கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து, புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடந்த விழாவில் அவர் புதிய கவர்னராக பதவி ஏற்று கொண்டார். கிரண்பேடி பதவி ஏற்றதை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாராயணசாமி, புதிதாக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.  கிரண்பேடி  அம்மா தயவு செய்து  தமிழக கவர்னராக வாருங்க...  காலில் விழும் கண்றாவியை ரசிக்கவே ஒரு முதலமைச்சர்  இங்கு உள்ளார். கொஞ்சம்  செருப்படியை இங்கும் கொடுங்கள்  

 
அப்போது, கிரண்பேடி காலில் விழுந்து சில எம்.எல்.ஏ.க்கள் ஆசிர்வாதம் பெற முயற்சி செய்தனர். அவர்களை தடுத்து நிறுத்தியதுடன், ''மக்கள் பிரதிநிதிகள் யாருடைய காலிலும் விழக்கூடாது" என்று கிரண்பேடி அறிவுறுத்தி கொண்டிருந்தார்.

அந்த நேரம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜயவேணி, வரிசையில் வந்து திடீரென கிரண்பேடி காலில் விழுந்து வணங்கினார். உடனே அவரை தடுத்த கவர்னர் கிரண்பேடி, யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென எம்.எல்.ஏ. விஜயவேணி காலில் விழுந்து அவரது காலை தொட்டு வணங்கினார்.

இதனை சற்றும் எதிர்பாராத விஜயவேணி எம்.எல்.ஏ. மற்றும் மேடையில் இருந்த நாராயணசாமி உள்ளிட்டவர்களும் சங்கடத்தில் நெளிந்தனர். அதோடு காலில் விழுந்த கவர்னர் கிரண்பேடியை உடனடியாக தூக்கினார் விஜயவேணி. இதனால் பதவி ஏற்பு விழாவில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.  விகடன்,com

கருத்துகள் இல்லை: