திங்கள், 30 மே, 2016

மோடி அரசு இரண்டாண்டு சாதனை விழா கொண்டாட்டம்


புதுடில்லி: மோடி அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி கூறும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் புதுடில்லியில் நடைபெற்று வருகின்றன.
 சாதனைகளை விட வேதனைகளே அதிகம், உதானதிர்க்கு பெட்ரோல் விலை உலகம் முழுவதும் குறைக்கபட்டாலும், இந்தியாவில் மட்டும்தான் விலையை உயர்த்தியது, உயர் கல்வி / மருத்துவம் போன்ற துறைகளுக்கான நிதியை 40% குறைத்து, உயிர் காக்கும் மருந்துகளின் விலையை 100% மடங்கு உயர்த்தியது, உயர் கல்விக்கான செலவை 100% மடங்கு ஆதிகபடுத்தியது, விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம், ஆண்மை குறைவு, கள்ளகாதல், போதை மருந்து குடும்ப தகறாரு என்று புதிய விளக்கம் அளித்தது, நாட்டில் உள்ள அணைத்து முக்கிய அரசு பதவிகளில் RSS, காரர்களை நியமித்து இந்துத்வா கொள்கைகளை நிறைவேற்ற துடிப்பது, சிறுபான்மை மக்களின் வழிபாட்டு இடங்களை திட்டமிட்டு தாக்குதல் நடத்துவது என்பதுதான் இவர்களின் சாதனை. இவர்கள் செய்த உருப்படியான காரியம் ஒன்று உண்டு என்றல் அது அண்மையிலே நரி குறவர் இன மக்களை ST, பிரிவிலே சேர்த்து அந்த மக்களும் இட ஒதிக்கீடு பெற செய்ததுதான்.


மத்தியில் பிரதமர் மோடி தலைமைியலான பா.ஜ., அரசு பதவியேற்று இரண்டாடுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றன. இதனை கொண்டாடும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதனை விளக்க முகாம் நடைபெற்று வருகினற்றன. இந்நிகழ்ச்சிளி்ல் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர். அதே போல் புதுடில்லியிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வி்த்யாபாலன் கூறுகையில் தூய்மை இந்தியா திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என கூறினார். நடிகர் அமிதாப் கூறுகையில் பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் மோடி அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என கறினார். தொடர்ந்து மத்திய அமைச்சர்களான நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில் மோடி அரசில் இந்தியா பொருளாதார வலிமை மிக்க நாடாக விளங்கி வருகிறது. என கூறினார், அமைச்சர் உமாபாரதி கூறுகையில் 14ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. என கூறினார்  dinamalar.com

கருத்துகள் இல்லை: