சனி, 4 ஜூன், 2016

இளங்கோவன் : பிடிபட்ட 570 கோடியில் அருன்ஜெட்லிக்கும் 30 வீதம் கமிஷன் கொடுத்துள்ளார்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது,திருப்பூர் அருகே கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி சிக்கிய விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 30 சதவீதம் வரை மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு கமிஷன் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான் அந்த பிரச்சினையை மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். அதை நானும் வலியுறுத்துகிறேன்.சி.பி.ஐ. விசாரணை கேட்பது தவறு என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சொல்கிறார்.    உலகத்தில எந்த நாட்டிலையும் இவ்வளவு பகிரங்கமாக ஊழல் நடக்காது. அடங்கப்பா எங்கேயோ போயிட்டீங்க... அடுத்த பொருளாதார (ஊழல்)  நோபல் பரிசு அம்மாவுக்குதாய்ன்  
தவறு நடக்கவில்லை என்றால் அதை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஜெயலலிதாவை விட தமிழிசைக்குதான் அதிகம் உள்ளது.மோடி தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சம் கருப்பு பணத்தை மீட்டுத் தருவேன். மீனவர்களுக்கு தனி அமைச்சகம் கொண்டு வருவேன், படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்றார். ஆனால் அதில் எதையும் அவர் செய்யவில்லை. காரணம் அவர் இந்தியாவில் இருப்பதில்லை. இவ்வாறு கூறினார்.>படங்கள்: செண்பக பாண்டியன்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: