வியாழன், 2 ஜூன், 2016

நாறிய வேந்தர் .....என்னதான் நடக்குது நாட்டில்? பாலியல் குற்றம் கூட இனி குற்றம் இல்லையா?

பாரி வேந்தர். பாரிவேந்தர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும், பச்சமுத்து யார் ? பச்சமுத்து, தமிழகத்தின் நம்பர் ஒன் கல்விக் கொள்ளையன். பச்சமுத்து நடத்தும் மருத்துவக் கல்லூரியில் ஒரு எம்பிபிஎஸ் சீட்டின் விலை 75 முதல் 80 லட்சம். ஒரு எம்.எஸ் அல்லது எம்.டி சீட்டின் விலை ஒன்றரை கோடி.
சமீபத்தில் வருமான வரித்துறையினர் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களில் நடத்திய சோதனைகளை அடுத்து, மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி விற்பனை செய்யப்படும் இடமாக மாறியிருப்பது பச்சமுத்து நடத்தும் இந்திய ஜனநாயகக் கட்சியின் அலுவலகம். இந்த அலுவலகத்தில் வசூலை கவனிப்பவர், வேந்தர் மூவிஸ் நிறுவனத்தை நடத்தும் எஸ்.மதன். இவரிடம் சென்று மருத்துவ சீட்டுக்கான தொகையைக் கொடுத்தால், அவர் ஒரு ரோஸ் நிற டோக்கனைக் கொடுப்பார். அந்த டோக்கனை எடுத்துச் சென்று கல்லூரியில் கொடுத்தால், எம்.பி.பி.எஸ் சீட் வழங்கப்படும்.

இந்தத் தகவலை, மத்திய மாநில அரசின் புலனாய்வு அமைப்புகளிடம் கூறியும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த வாரம், ஏகலைவன் வார இதழில் வெளியான கட்டுரை, சவுக்கு தளத்தில் பிரசுரிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கட்டுரையின் உண்மைத் தன்மை குறித்து சில சந்தேகங்கள் இருந்ததால், அக்கட்டுரை உடனடியாக பிரசுரிக்கப்படாமல் இருந்தது.
இன்று, இந்திய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்று தன்னை அழைத்துக் கொண்ட சுரேஷ் என்பவர் தலைமையில் 60 பேர் கொண்ட கும்பல் சென்று, ஏகலைவன் அலுவலக வாயிலில், முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். வந்தவர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்குள், காவல்துறையினர் வந்து கூடியவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.
வந்தவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை, ஜனநாயக வழியில் எதிர்ப்பைக் காட்டினார்கள் என்று ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டால் கூட, கனகா இறந்து விட்டார் என்று செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்பாக யார் ஆர்ப்பாட்டம் நடத்துவது ? தவறாகவோ, பொய்யாகவோ, அவதூறாகவோ செய்தி வெளியிட்ட நிறுவனத்தின் மீது, அவதூறு வழக்கு தொடுக்க சட்டத்தில் இடமிருக்கையில், பச்சமுத்து ஆட்களை அனுப்பி மிரட்டியதற்குப் பெயர் ரவுடித்தனம்.
பச்சமுத்துவின் இந்த ரவுடித்தனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏகலைவன் பத்திரிக்கையில் வெளிவந்த அந்தக் கட்டுரை அப்படியே மறுபதிப்பு செய்யப்படுகிறது. சவுக்கு தளத்தை எழுதுபவர் யார், அவர் எங்கே இருப்பார் என்ற தகவல்கள், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தெரியும். அந்த 60 பேரை அனுப்புங்கள் பச்சமுத்து.
பாரிவேந்தர் மீது பாலியல் புகார் கூறும் திலகா..
இந்திய ஜனநாயக கட்சியில் தூத்துக்குடி மாவட்ட மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிப்பவர் திலகவதி. 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் போட்டியிட்டவர். மீனவ சமுதாயத்தை சார்ந்த இவர் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் அங்கமான லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவத்தின் தூத்துக்குடி கிளையை நடத்துபவர். பாரிவேந்தருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட திலகவதி பாரிவேந்தர் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அச்சில் ஏற்ற முடியாத ரகத்தை சார்ந்தவை. நம்மை சந்தித்து கடிதம் கொடுத்து பிரசுரிக்குமாறு கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கடிதத்தை அப்படியே பிரசுரிக்கிறோம்....
‘‘தூத்துக்குடி, 1&பி. சன்பீட்டர் கோவில் தெருவில் வசிக்கும் திலகவதி ஆகிய நான், இந்திய ஜனநாயக கட்சியில் மாவட்ட மகளிரணி செயலாளராக இருந்து வருகிறேன். ஏழை மக்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பியர்ல் சிட்டி பவுண்டேசன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வருகிறேன்.
2011&ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளராக ஐ.ஜே.கே. கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் செய்திருந்தேன். சில காரணங்களுக்காக வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படவே நான் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவானது. இதற்காக வழக்கு தொடுத்து வழக்கும் நடந்து வருகிறது.
திருநெல்வேலியில் நடந்த கட்சியின் மாநாடு, சென்னையில் நடந்த பாரிவேந்தரின் பிறந்த நாள் விழாவான இளைஞர் எழுச்சிநாள் ஆகியவற்றில் பெருந்திரளான பெண்கள் மற்றும் இளைஞர், இளைஞிகளுடன் கலந்து கொண்டேன்.
இந்நிலையில் எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிறுவனத்திற்கு கிளைகள் தேவைப்படுவதாக புதிய தலைமுறை பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன். நான் கட்சியில் பொறுப்பில் இருந்ததால் எனக்கு எளிதில் அனுமதியும் கிடைத்தது. இந்த பயிற்சி மையத்தை புகழ் பெற வைக்க வேண்டும் என நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, மேம்பட்ட உள்கட்டமைப்பு, எஸ்.ஆர்.எம்.நிறுவனத்திற்கான வைப்புத் தொகை, விளம்பர செலவுகள் என ரூ.45,00,000 (நாற்பத்தைந்து லட்ச ரூபாய்) செலவழித்துள்ளேன். இந்த பயிற்சி மையத்தை திறம்பட நடத்துவதற்கு எஸ்.ஆர்.எம். நிறுவனம் சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி துவக்க விழா சம்பந்தமாக விளம்பரங்களும், ஊடக விளம்பரங்கள் போன்றவற்றையும் செய்யவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையில் தொய்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆதனால் பயிற்சி மையம் நடத்துவதற்கு சிரமப் பட ஆரம்பித்தேன்.
இதற்கிடையில் 2011&ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன். இதற்காகவும் நிறைய பணத்தை செலவழித்தேன். பொருளாதார ரீதியாக எனக்கு ஏற்பட்ட இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கட்சியின் நிறுவனரும், எஸ்.ஆர்.எம். வேந்தருமான பாரிவேந்தரை சந்தித்து முறையிட திட்டமிட்டு, அப்போதைய மாநில இளைஞரணி செயலாளர் மதன் அவர்களை தொடர்பு கொண்டேன். அந்த சமயத்தில் மதுரை வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களை சந்திக்க பாரிவேந்தர் வருவதாகவும், அந்த சமயத்தில் மதுரை பாண்டியன் ஹோட்டலுக்கு வந்தால் வேந்தரை சந்திக்கலாம் என்றும், அதற்காக சிறிய வேலை ஒன்று செய்ய வேண்டும் எனவும் கூறினார். ஏதேனும் கூட்டம் அழைத்து வரச் சொல்வார்களோ என்று எண்ணிய என்னிடம், “நீ தொண்டு நிறுவனம் நடத்தி சமூகப் பணிகள் செய்து வருவதால் நிறைய இளம்பெண்களின் அறிமுகம் வைத்திருப்பாய். அழகான இரு இளம்பெண்களை அழைத்து வந்து வேந்தரை திருப்திப்படுத்தினால் உன் பிரச்சினை அனைத்தும் இன்றே தீர்க்கப்பட்டு விடும்’’ எனக் கூறினார். அதிர்ச்சியடைந்த நான் மதனை திட்டிவிட்டு அவரின் உதவி இல்லாமலேயே
http://www.savukku.net/index.php… சந்தித்தேன். என்னை பார்த்த வேந்தர் “என்ன தனியாக வந்திருக்கிறாய்? மதன் ஏதும் கூறவில்லையா?” என்று கேட்டார். அதற்கு “அந்த மாதிரி ஆள் நான் இல்லை. உங்கள் கட்சியையும், நிறுவனத்தையும் நம்பி நான் மோசம் போய்க் கொண்டிருக்கிறேன்.
நிறுவனத்திற்காக நிறைய முதலீடும் செய்து விட்டேன். தற்போது தாங்க முடியாத கடன் பிரச்சினையில் இருக்கிறேன். எனவே என்னுடைய பிரச்சினைக்களுக்கு தீர்வு காண ஆவணச் செய்யுமாறு எஸ்.ஆர்.எம். லேனிங் ட்ரீ பிரைவெட் லிமிடெட் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டேன்.
நமட்டுச் சிரிப்போடு என்னை அனுப்பி வைத்த வேந்தர் ஆவணச் செய்வதாக கூறினார். பணத்தை பெற சென்னைக்கும் & தூத்துக்குடிக்கும் அலைந்தேன். ஒரு பயனும் இல்லை. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கும் சென்று முறையிட்டேன். ஊடகங்கள் வாயிலாக உங்கள் மோசடியை வெளிக் கொண்டு வருவேன் என சூளுரைத்தேன். ஊடகங்களுக்கு நாங்கள் தான் ராஜா. ஊடகங்களின் பெயரை பயன்படுத்தி எங்களையே மிரட்டுகிறாயா? என சீறியவர்கள் முடிந்ததை பார் என சத்தமிட்டார்கள்.
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள என்னுடைய பயிற்சி மையம் பாரிவேந்தர் மற்றும் மதன் ஏற்பாட்டில் அடித்து நொறுக்கப்பட்டு அனைத்துப் பொருட்களும் அள்ளி செல்லப்பட்டு விட்டன. எனக்கு மன உளைச்சலையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திய பாரிவேந்தர் மீதும் அவருடைய நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வழி வகை செய்யும் பொருட்டு இந்த மோசடியை பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
அன்புடன் என்றும் தாயக பணியில் திலகவதி.
இது சம்பந்தமாக பாரிவேந்தரின் கருத்தையறிய இரண்டு முறை அக்கட்சியின் தலைமை நிலையத்திற்கு சென்றோம். சந்திக்க முடியவில்லை. இருப்பினும் புகாரை பிரதி எடுத்து கொடுத்து கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டோம் அதற்கும் பதிலில்லை.
என்னதான் நடக்குது நாட்டில்?
நன்றி ஏகவலைவன் வார இதழ்
தொடர்புடைய ஆதாரங்கள்.

LikeShow more reactions
Comment
1 comment
Comments
Radha Manohar
Write a comment...

கருத்துகள் இல்லை: