புதன், 1 ஜூன், 2016

நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் ! விநியோகஸ்தர்கள் கோரிக்கை!

மதுரை: நடிகர் நடிகைகளின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று மதுரை-ராமநாதபுரம் சினிமா வினியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. சங்கத் தலைவர் செல்வின்ராஜ் தலைமை தாங்கினார்.>இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ் திரைப்படங்களின் விலை மிக அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான பெரிய படங்கள் வசூல் வினியோகஸ்தர்களுக்கு லாபமாக இல்லை. அவர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் இருக்க நடிகர், நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள் ஆகியோர் தங்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்.

நமது ஏரியாவில் திரையரங்குகளில் நுழைவு கட்டணம் குறைவாக உள்ளது. கட்டண உயர்வு தொடர்பாக ஏற்கனவே கொடுத்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு கொள்ளப்படுகிறது.
ரூ.50 லட்சத்திற்கு மேல் வாங்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களின் சம்பளத்தில் 25 சதவீதத்தை, படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டும். படம் வெளிவந்து வெற்றி பெற்று லாபம் கிடைத்தால் அந்த 25 சதவீதம் வழங்க வேண்டும்.
படம் தோல்வி அடைந்து நட்டம் ஏற்பட்டால் சம்பள பணத்தை வினியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் போன்றவர்களுக்கு சதவீத அடிப்படையில் அந்த பணத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: