புதன், 1 ஜூன், 2016

புத்த கோயிலில் 40 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிப்பு


தாய்லாந்தில் உள்ள புத்த கோயிலில் குளிர் சாதன பெட்டி ஒன்றில் நாற்பது புலிக் குட்டிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். Image copyright AFP இந்தக் கோயிலின் மூலம், வன உயிர்கள் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது . கான்சனாபுரி மாகாணத்தில் உள்ள இந்த இடத்தில் இருந்து 130 உயிருள்ள புலிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் போது இறந்து கிடந்த புலிக்குட்டிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ள இந்தப் புலிக்கோயில் மூலம் வருடத்திற்கு பல மில்லியன் டாலர் அளவு வருமானம் வருகிறது. விலங்கின ஆர்வலர்கள் இந்த புலிக் கோயிலை மூடுவதற்காக நெடுங்காலமாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வந்தனர். Image copyright Getty கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து வன உயிர்கள் கடத்தப்படுவதாகவும் தவறாக நடத்தப்படுவதாகவும் எழுந்த புகார்களை அடுத்து அங்குள்ள புலிகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் இந்தக் கோயிலின் புத்த துறவிகளுடன் போராடிக் கொண்டிருந்தனர். எனினும் புத்த மதத் துறவிகள் அங்கு எந்த விதத் தவறும் நடக்கவில்லை என மறுத்துள்ளனர்.bbc.com

கருத்துகள் இல்லை: