வெள்ளி, 3 ஜூன், 2016

டாஸ்மார்க் 500 ரகசியம் இதுதாய்ன் :லெஸ் பிரான்ச் மோர் ப்ரோபிட் less branches more profits

தமிழகமெங்கும் கிளை பரப்பி ஜோராக வியாபாரம் செய்து வரும் இனிப்பகத்தின் (ஸ்வீட் ஸ்டால்) முக்கியமான போர்ட் மீட்டிங் அது...
பெண் சி இ ஓ தான் சேர் பண்ணுகிறார். விபி மார்கெட்டிங் மற்றும் விபி ஃபைனான்ஸ் இருவரும் புள்ளி விவரங்களோடு எதிரெதிரே அமர்ந்திருக்க மற்றும் இன்னபிற மெம்பர்கள் எல்லாம் ஆவலும் பரபரப்புமாய் காத்திருக்கின்றனர்.
சி இ ஓ தான் ஆரம்பிக்கிறார்...
இப்போ தமிழகம் முழுக்க நமக்கு எத்தனை கிளைகள் இருக்கு?
650 கிளைகள் இருக்கு மேம்... இது விபி மார்கெட்டிங்..
குரோத் எப்படி இருக்கு சொல்லுங்க...
கடந்த அஞ்சு வருஷத்துல ஹண்ட்ரட் பர்சண்ட் குரோத் காமிச்சிருக்கோம் மேடம். ஆவரேஜா பார்த்தா வருஷத்துக்கு 20% க்ரோத் இருக்கு.
ப்ரான்ச் க்ரோத் சரி... சேல்ஸ் க்ரோத் எப்படி இருக்கு?

நல்லாருக்கு மேம்...! அதுவும் பார்த்தீங்கன்னா லாஸ்ட் ஃபைவ் இயர்ஸ்ல ஹண்ட்ரட் பர்ஸெட்க்கு மேல ஆகியிருக்கு மேம்... சேல்ஸ் மேனுக்கு எல்லாம் டார்கெட் ஃபிக்ஸ் பண்ணி இன்செண்டிவ் எல்லாம் தர்றோம் மேம். இன்சென்டிவ், கமிஷன் எல்லாம் கிடைக்குறதுனால... விடுமுறை நாட்கள்ல கூட முதல் நாளே அவங்க சொந்த பொறுப்புல நம்மகிட்ட பர்சேஸ் பண்ணிட்டு போயி சொந்தமா வித்து நம்ம சேல்ஸ் 365 நாளும் சீராக இருக்குற மாதிரி மெய்ண்டெய்ன் பண்ணிடுறாங்க மேம்...
குட்.. குட்... அந்த அளவுக்கு நம்ம பொருளுக்கு நல்ல டிமாண்ட் இருக்குன்னு சொல்லுங்க....!
எஸ் மேம்... புதுசு புதுசா நிறைய கஸ்டமர்ஸ் நமக்கு வந்து சேர்ந்துக்கிட்டே இருக்காங்க மேம். ஒன்ஸ் நம்ம பொருளை அவங்க வாங்கி சாப்பிட்டா போதும் மேம்... அப்பறம் காலத்துக்கும் நம்ம பொருளை வாங்கி சாப்பிடாம ஒரு நாள் கூட அவங்களுக்கு விடியாது மேம்..!
ஓஹ்.... ஈஸ் இட்?! குட்... குட்...
விபி ஃபைனான்ஸ் குறுக்கிடுகிறார்...
என்னவோ சொல்ல வர்றீங்க சொல்லுங்க... மிஸ்டர் பார்த்தசாரதி....
தேங்க்யூ மேம்... இவர் ஷொல்றது எல்லாம் கரெக்ட் தான் மேம். ஆனா இதுல நாம இன்னும் கொஞ்சம் கூடுதலா லாபம் பார்க்கலாம்ங்கறது என்னோட அபிப்ராயம்..
டிமாண்ட் இருக்குறனால விலைய ஏத்தலாம்ன்னு சொல்றீங்களா?
விபி மார்கெடிங் அவசரமாஅக குறுக்கிட்டு.... நோ மேம்... இப்பத்தான் சமீபத்துல விலை ஏத்தினோம்... உடனே ஏத்தினா ஏழ பாழைங்க எல்லாம் வாங்குறத குறைச்சிப்பாங்க... இல்லன்னா விலை மலிவா கொடுக்குறவங்க கிட்ட மாறிடுவாங்க மேம்...!
பார்த்தசாரதி குறுக்கிட்டு... நான் விலையை ஏற்ற சொல்லல மேம்...
வேற என்ன? புது பிரான்சஸ் போடணுங்கறீங்களா??!!
விபி மார்கெட்டிங் குறுக்கிட்டு.... ஸாரி மேம்... நம்ம சிண்டிகேட் மெம்பர்ஸ் எல்லாம் இதுக்கு மேல நாம் பிரான்ச் திறக்கக் கூடாதுன்னு சீலிங் போட்டுருக்காங்க மேம்...! அதோட இல்லாம நாம சிண்டிகேட்ல ஜெயிக்கறதுக்கு சில பிரான்சஸ் எல்லாம் கூட குறைச்சுக்கறதா வாக்கு கொடுத்திருக்கோம் மேம்...! இந்த நேரத்துல புது ப்ரான்ச் போட்டு லாபத்தைக் கூட்ட முடியாது மேம்...!!
நான் ஒன்னும் புது பிரான்சஸ் ஓபன் பண்ண சொல்லலியே....! இது ஃபைனான்ஸ் பார்த்தி...
ஓக்கே... மிஸ்டர் பார்த்தி... நீங்க என்ன தான் சொல்ல வர்றீங்க? அத மொதல்ல தெளிவா சொல்லுங்க..!! இருக்குற கடைகளை வச்சிக்கிட்டே.... கஸ்டமர்ஸ்க்கு எக்ஸ்ட்ரா ஆஃபர், நவீன வசதிகளுடன், அங்கேயே அமர்ந்து சாப்பிடும் வசதி, டோர் டெலிவரி, மந்த்லி கூப்பன்... அதுக்கு ஆஃபர்.... இப்படியெல்லாம் சேல்ஸை இன்க்ரீஸ் பண்ண ஐடியா சொல்ல வர்றீங்களா?!
அதில்ல மேம்.... அதையெல்லாம் நம்ம விபி மார்கெட்டிங் பக்காவா செஞ்சிடுவார். அவரை நாம குறை சொல்ல முடியாது. சேல்ஸ் குரோத் அவர் நன்னா பண்ணிடுவார்...!! நான் சொல்ல வர்றது ப்ராஃபிட் க்ரோத்.
கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்...!!
ரொம்ப சிம்ப்பிள் மேம்...! இப்ப இருக்குற 650 கடைகள்... சில இடங்கள்ல அளவுக்கு அதிகமா இருக்குற மாதிரி தெரியுது. சில சின்ன சின்ன ஊர்ல எல்லாம் கூட 3 கடைகள் வரைக்கும் இருக்கு. அதுல ஒரு கடைய மூடினா கூட நம்ம கஸ்டமர்ஸ் அங்க இருக்குற ரெண்டு கடைல வாங்கி சாப்பிட்டுப்பாங்க. வேற எங்கயும் போயிட மாட்டாங்க. அந்த ஒரு கடைக்காக நாம கொடுக்குற வாடகை, அட்வான்ஸ், கரண்ட் பில், ஆட்கள் சம்பளம், இதர படிகள், டெலிவரி சார்ஜஸ் இப்படி மாசா மாசம் பெரிய அமௌண்ட் நமக்கு மிச்சமாகும் மேம். இப்புடி ஸ்டேட் ஃபுல்லா இருக்குறதுலேர்ந்து செலக்ட் பண்ணி 50 கடைகளை நாட் நெசஸரின்னு லிஸ்ட் பண்ணியிருக்கேன் மேம். அவற்றை மூடிட்டாலே போதும் மேம்... நம்ம சேல்ஸ்லயும் எந்த குறைபாடும் வராது... எக்ஸ்ட்ரா லக்கேஜை தூக்கி கடாசிடுறதுனால சேமிப்பும் கிடைச்சி அதே சேல்ஸ்... பட் லாபம் அதிகமாவும் கிடைக்கும் மேம்...! அது மட்டும் இல்லீங் மேம்... சிண்டிகேட்ல நாம வாக்கு கொடுத்த மாதிரி... 8% கிளைகளை அவர்கள் நன்மைக்காக குறைச்சிட்டதாவும் சொல்லிக்கலாம்...!!
அனைவரும் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள்...!!
வெல்டன் மிஷ்டர் பார்த்தி....! வெல்டன்...! இதுக்காக நான் உங்களுக்கு வேற சில நல்லதுகளை எல்லாம் பண்றதுக்கு முன்னாடி... இப்போ இன்ஸ்டண்ட்டா உங்களை கவுரவிக்கப் போறேன்...!
ஆவலாய்..... எப்டி மேம்?
கும்பகோணம் வெத்திலையோட.... நெய் வறுவல் மாயவரம் சீவலும் வருது.... அதுக்கு முன்னாடி... இதோ இந்த டிகிரி காஃபிய குடிங்க....!!!!
பின் குறிப்பு: இது அரசியல் பதிவு அல்ல. கனவுல வந்த போர்டு மீட்டிங் மட்டுமே...!/stalin.thayanidhi

கருத்துகள் இல்லை: