ஞாயிறு, 29 மே, 2016

விஜயகாந்தை அடிச்சு துவைச்சு காயப்போடும் சிட்டிசென்ஸ் அண்ட் நெட்டிசன்ஸ்

1.அய்யா நீங்கள் ஒரு பெரிய இலக்கியவாதியாக இருக்க வேண்டும் என்றோ அல்லது மேடை பேச்சாளராக இருக்கவேண்டும் என்றோ மக்கள் எதிர் பார்க்க வில்லை இந்தியாவின் மிக முக்கிய மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தை ஆள உங்களிடம் உள்ள சிறந்த சில தகுதிகளை நீங்களே கூறுங்கள் அல்லது நீங்கள் இதுவரை மக்களுக்காக ஆற்றிய சீரிய பணிகளை பற்றி கூறுங்கள் அல்லது உங்களின் சிறந்த நிர்வாக திறமைக்கு ஏதேனும் ஒரு உதாரணம் கூறுங்கள் பின்னர் மக்களை சந்தியுங்கள்
2.விஜயகாந்த் மக்கள் நல அணியில் சேரும் வரை வைகோ 1500 கோடி பெற்றதாக யாரும் சொல்ல வில்லை ஆனால் அப்படி மத்தவர்கள் சொல்வதை அதிமுக மறுக்கவில்லை, விஜயகாந்த் மக்கள் நல அணியில் சேரும் வரை திமுக 500கோடி பேரம் செய்திகள் வருவதை திமுக மறுக்கவில்லை. இதுதான் திமுக அதிமூகவின் பக்குவம் ....உங்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப்போகிறது  

3.எனக்கு தெரிந்து ஒரு 30 வருடங்களில் தமிழர்கள் தீர்க்கமாக சிந்தித்து தக்களது வாக்கின் மூலம் ஒரு மாபெரும் களை எடுக்கும் பணியை நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றால் அது விஜயகாந்தை செல்லாகாசாக்கியதுதான் இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அரசியல் வேண்டாம் என்று மகன் சண்முக பாண்டியனை வைத்து ஏதாவது படம் கிடம் எடுக்கிறேன் என்று கிளம்பினால் அதையும் நாம்தானே பார்த்து தொலைய வேண்டும்? அந்த கொடுமைதான் இன்னும் பெரிய கொடுமை
4 .எல்லாம் சரி. இவர் ஏன் உளுந்துர்பேட்டையில் டெபொசிட் இழுந்தார் என்று விளக்கம் சொன்னாரா. டெபொசிட் கிடைக்க போவதில்லை என்று தெரிந்தபின் யாராவது கை பணத்தை தண்ணீரில் கரைபார்களா. பதில் விளக்கம் சொன்னால் எங்கே கோபத்தில் கடித்து விடுவரோ என்று தான் மாசெக்களும், வேட்பாளர்களும் வெளியில் வந்து பொருமி இருக்கிறார்கள். முரசு தான் கிழிந்து விட்டதே. இன்னும் எதற்காக காத்திருக்கிறார்கள் புரியவில்லை. இந்த மாதிரி தலைமை கொண்ட கட்சிகள் அழிந்து போவதே நாட்டிற்கு நல்லது.
5.இன்னும் இவர் வைகோவை நம்புகிறார் போல தெரிகிறது......வைகோ வாங்கிய பணத்துடன் செட்டில் ஆகிவிட்டார்....இனி அதிமுக வின் அடுத்த அசைமெண்டுக்கு வருவார்....விஜயகாந்த் தனது ரகசியங்களை வைகோவுடன் பகிர்ந்திருப்பார் ...ஆகையால் இனி இருக்கும் மிச்சம் மீதி காலி ஆகும்வரை வைகோ இவரை சுற்றி வர வாய்ப்பு உண்டு...
6. இந்த சினிமாக்காரர்கள் கட்சிகள் எல்லாம் தனி நபர் வழி பாடும் கட்சிகள்.இந்த தேர்தலில் சினிமாக்காரர்களை மக்கள் நிராகரித்து விட்டார்கள்..இது தமிழகத்திற்கு ஒரு புது டிரெண்ட். சரத்குமார் 2016 சி.எம் என்று பேசி அரசியல் செய்தார்...பாவம் கட்சி சின்னத்திலே நிற்க முடியவில்லை..விஜயகாந்த், சரஸ்வதி...இப்படி சினிமாக்காரர்கள் தோற்று விட்டார்கள்...விஜகாந்த் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை.. இவரே டெபாசிட் வாங்காமல் பிறரை பற்றி பேசுகிறார்.. போன தடவை இவர் எதிர்கட்சி தலைவராக என்ன செய்தார்..?.. சட்டசபைக்கே போகாதவர் எப்படி எதிர்கட்சி தலைவர் ஆவார்..? இதோடு இவருக்கு படித்தவர்கள், விபரம் தெரிந்தவர்கள் பிடிக்காது..இவரும் ஜெயா போல் எல்லோரும் காலில் விழ வேண்டும் என்று நினைக்கிறார்.. அரசியலை வியாபாரம் என்று நினைத்து செயல்படுகிறார்..எதோ கொஞ்சம் காசு உள்ளது. இதோடு இவர் ஏழை எளியவர்களுக்கு உதவுகிறார்..இது மட்டும் சி.எம் ஆக முடியாது... அது சரி எப்படி தமிழ் நாட்டில் மட்டும் படிக்காதவர்களே சி.எம் ஆக விரும்புகிறார்கள்.. இதற்க்கும் தமிழ் நாட்டில் படித்தவர்கள் அதிகம். ஐ.டி.துறையில் .கோலோச்சுகிரார்கள்.. நான்கு தமிழர்கள் நோபல் பரிசு பெற்று இருக்கிறார்கள்.. இன்றும் கூட இந்திய பொருளாதாரத்தை ஆள்பவர்கள் ரகுராம் ராஜன், சுப்பிரமணியன்..- தமிழர்கள் .இப்படி பட்ட சமூகத்திர்க்கு ஒரு படித்த தலைவர் கிடைக்கவில்லையா..?.
7. தேர்தலில் உச்சகட்ட தோல்வியை அனுபவித்தவர் திரு.விஜய் காந்த் மட்டுமே, அவர் மீது இருந்த பிரமாண்டம் என்ற பிம்பம் தகர்ந்து போய்விட்டது, இனி அவர் எந்த கட்சியுடனும், தெம்பாக தொகுதி பங்கீடு செய்ய முடியாது, கொடுப்பதை வாங்கிக்கொள்ளும் நிலையில் தான் இருப்பார், இனி அவர் மிகவும் கஷ்டப்பட்டு தன்னை அடையாளப்படுத்த வேண்டும், அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை, இனி வருத்தப்பட்டு எந்த பயனும் இல்லை, இதற்க்கு முழுக்க முழுக்க விஜயகாந்த் மட்டுமே காரணம், கடைசி வரை பிடிகொடுக்காமல் பேசியது, மாறி மாறி பேசியது, இவரிடம் ஒரு நிச்சயமற்ற தன்மை மக்களுக்கு பிடிக்கவில்லை,
8 .அரசியலுக்கு லாயக்கில்லாத ஒருவருக்கு இந்தளவு ஆதரவு கிடைக்கப் பெற்றதே அதிகபட்சம். இனியும் அவரைப்பற்றி எழுதிக் கொண்டிருப்பது வேஸ்ட்டு.
9. மாட்டுத்தரகர் மாதிரி இவர் தேர்தலுக்கு தேர்தல் அதிமுக தவிர எல்லா கட்சிகளிடமும் தரா தரம் இல்லாமல் பேரம் பேசியது மக்கள் மனதில் இவர் மீதான நம்பிக்கையை இழக்க செய்து விட்டது. ஒவ்வொரு கட்சியையும் ஆட்டிப்படைத்து விடை சொல்லாமல் கடைசி வரை இழுத்தடித்தது மக்கள் மனதிலும் கட்சி காரர்கள் மனதிலும் வெறுப்படைய வைத்தது. வேண்டாவிதமாக தனிமனித காழ்ப்புணர்ச்சி கொண்டு ஜெயாவை கண்டபடி தாக்கியதால் தொண்டர்கள் திமுக மன நிலைக்கு சென்று விட்டனர். ஒப்புக்கு சப்பாக திமுகவையும் ஒரு சில சமயம் விமர்சித்ததை தொண்டர்கள் ஏற்க வில்லை. இவர்கள் யாவரும் மக்கள் நல கூட்டணியில் தேமுதிக இருந்தாலும், திமுகவுக்கே வாக்களித்தனர். இதன் காரணமாகவே திமுக சுமார் 4% தேமுதிக வாக்குகளை சுளையாக அள்ளியது. 2006 க்கு முன் கட்சியை விஜயகாந்த் ஆரம்பித்த போது இவரை பற்றி மக்களுக்கு பெரிதாக தெரியவில்லை சினிமாவில் தோன்றுவதை நம்பினார்கள். ஆனால் ரியல் வாழ்க்கையில் முலாம் பூசப்பட்ட இவரது குணம் வெளிப்பட்டது மக்கள் இவரை ஒரு அரசியல்வாதியாக எண்ணவில்லை. தற்போது ஒழுங்காக பேசமுடியாமல் அல்லல் படுகிறார் அதுவும் ஒரு காரணம். மேடையிலும் பொது இடங்களிலும் தலைவருக்குரிய பண்புகளோடு நடந்து கொள்ளவில்லை என்பதும் வேதனை தான். இவரது மனைவியின் (பிரேமலதா) ஓவர் பேச்சு, தவறான கூட்டணி, பணபலம், ஊடக பலம் உள்ள திமுக, அதிமுக கட்சிகளை எதிர்க்கும் அளவுக்கு இவரிடம் பலம் இல்லாதது இவரது தோல்விக்கு காரணம்.
10 .

கருத்துகள் இல்லை: