புதன், 1 ஜூன், 2016

ஓசூர் நில அளவையர் கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட எட்டு பேர் கைது( படங்கள் )

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது இராமமூர்த்தி நகர். இந்த ஊருக்கு அருகிலுள்ள சாலயோர பள்ளத்தில் கடந்த 28–ந் தேதி அதிகாலை ஒரு கார் கவிழ்ந்துள்ளது.பின்னர் சிறிது நீரத்தில் தீப்பிடித்து எறிந்த அந்த காரிலிருந்து இறங்கிய ஒருவர் உடலில் லேசான நெருப்பு காயங்களுடன் பக்கத்திலிருந்த சாமந்திப்பூ தோட்டத்துக்குள் ஓடியுள்ளார்.
;தீப்பற்றி எரியும் காரிலுள்ள முதலாளியை காப்பாற்றவேண்டும் என்று சொல்லிக்கொண்டு எதற்காக பூந்தோட்டத்துக்குள் ஓடிவந்து ஒளிகிறான் என்று சந்தேகப்பட்ட மக்கள் இவன் திருடனாக இருக்குமென்ற சந்தேகத்தில், அங்கிருந்த மரத்தில் அவனை கட்டிப்போட்டுவிட்டு, விபத்து நடந்ததாக கூறிய  இடத்துக்கு சென்று பார்த்துள்ளனர்.
தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த காருக்குள் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில், இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்."

அங்கு சென்ற போலீசார், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த ஓமலூரை அடுத்த வெள்ளாளபட்டி, சக்தி விநாயகர் தெருவைச் சேர்ந்த சக்திவேல் (வயது-36) என்பவரை விசாரித்ததில், கொலை செய்யப்பட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த நில அளவையர் குவளை செழியன் என்பது தெரிந்துள்ளது.;
மேலும், சக்திவேலிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருடன் சேர்ந்து கூலிப்படையாக செயல்பட்டு இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சேலத்தை சேர்ந்த சிலருடைய பெயரை அவர் போலீசாரிட தெரிவித்தார்.

அந்த தகவலின் பேரில், குவளைசெழியனின் கள்ளக்காதலியான ஓசூரை சேர்ந்த பால்ராஜ் என்பவரின் மனைவி கார்த்திகேயனி (வயது-38) மற்றும் கூலிப்படையாக செயல்பட்ட சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னவர் (வயது-21), முருகன் (வயது-23), பிரபு (வயது-26), சித்துராஜ் (வயது-21), முத்து (வயது-26), ஓமலூர் காமலாபுரம் ஏர்போர்ட் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜா (வயது-30) ஆகியோரை போலீசார் நேற்று முன்தினமே கைது செய்தனர்.இந்த கொலை சம்பவம் தொடர்பாக சக்திவேல் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:–சேலத்தை சேர்ந்த இக்ரமுல்லா என்பவரிடம் அவரது மல்டிலெவல் மார்க்கெட்டிங்கில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வேலை செய்து வந்தேன். அவருடைய காருக்கு அவ்வப்போது ஆக்டிங் டிரைவராகவும் வேலை செய்து வருவேன். இக்ரமுல்லாவுக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இதுதவிர வேறு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவ்வாறு ஓசூரில் உள்ள கார்த்திகேயனி என்ற பெண்ணுடனும் அவருக்கு தொடர்பு இருந்தது. தன்னுடைய கள்ளக் காதலிகளுக்கு நிறைய பணம் செலவு செய்வார்.பின்னர், கார்த்திகேயினி ஓசூரில் வீடு கட்டும்போது, அவருடைய நிலத்துக்கு பட்டா வாங்க வேண்டும் என்பதற்காக ஓசூரை சேர்ந்த நில அளவையர் குவளை செழியன் என்பவரை சந்தித்துள்ளார். கார்த்திகேயினிக்கு பட்டா கொடுக்காமல் செழியன் இழுத்தடித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், “பட்டா வாங்க நான் எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன்...” என்று கார்த்திகேயனி குவளை செழியனிடம் சொல்லியுள்ளார்

ஆனால், செழியன் “எனக்கு தேவைக்கு மேலேயே பணம் உள்ளது. அதெல்லாம் வேண்டாம். நீ தான் வேண்டும், உன்னோடு நான் சந்தோசமாக இருக்க வேண்டும்” என்று சொல்லியுள்ளார். பல மாதங்களாக நீடித்த இந்த பிரச்சனை கர்த்திகேயனி குவளை செழியனின் ஆசைக்கு சம்மதித்ததின் பேரில் முடிவுக்கு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, கார்த்திகேயினி வீட்டுக்கு செழியன் பட்டா போட்டு கொடுத்து விட்டாலும், மீண்டும் மீண்டும் தன்னுடன் வருமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், இந்த விசயத்தை கார்த்திகேயினி இக்ரமுல்லாவின் கவனத்துக்கு கொண்டு வந்து, சர்வேயர் குவளைசெழியன் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக கூறி உள்ளார்.
இதனால், இக்ரமுல்லா குவளை செழியனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதே நேரத்தில் குவளை செழியன் கோடீஸ்வரர் என்பதால் அவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டி, அவருடைய குடும்பத்தினரிடம் பணத்தை வாங்கிகொண்ட பின்னர் அவரை தீர்த்துக்கட்டலாம் என்று இக்ரமுல்லாவும், கார்த்திகேயனியும் திட்டமிட்டனர்.

இதற்காக என்னை தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்டனர். நாங்கள் மூவரும் திட்டமிட்டு, எனக்கு தெரிந்த சேலம் கோட்டக்கவுண்டம்பட்டியை சேர்ந்த மக்கள் தேசம் கட்சியின் மண்டல அமைப்பாளரான கலைவாணன், கிச்சிபாளையத்தை சேர்ந்த பிரபு, முருகன், சித்துராஜ், முத்து, சின்னவர், ஓமலூர் காமலாபுரம் ஏர்போர்ட் காலனி பகுதியை சேர்ந்த இராஜா ஆகியோருடன் சேர்ந்து இக்ரமுல்லாவின் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் கடந்த 26–ந் தேதி ஓசூர் சென்று இராயக்கோட்டை லாட்ஜில் தங்கினோம்.

குவளைசெழியனின் வீட்டை நோட்டமிட்டு, பிறகு 27–ந் தேதி காலை குவளைசெழியன் அவருடைய காரில் வீட்டில் இருந்து புறப்பட்டு ஓசூர் நோக்கி சென்றபோது நாங்களும் காரிலும், இருசக்கர வாகனத்திலும் அவரை பின்தொடர்ந்தோம்.அன்று முழுவதும் ஓசூர் டவுன், பாலக்கோடு, தர்மபுரி பகுதிகளில் இரண்டு கார்களிலும் சுற்றிகொண்டே, குவளை செழியனிடம் பணம் கேட்டு வாங்க திட்டமிட்டோம். சூழ்நிலை சரியாக வராததால், அங்கிருந்து தருமபுரி வழியாக அரூர் சென்று செழியனை கட்ட நைலான் கயிறும், பத்து லிட்டர் கேனும் வாங்கி பெட்ரோல் பிடித்துக் கொண்டு வாணியம்பாடி சென்றோம்.
பிறகு அங்கிருந்து குவளைசெழியனின் மனைவிக்கு மாலை 3.45 மணிக்கு போன் செய்து “தன்னை விஜிலென்ஸ் அதிகாரிகள் பிடித்துக் கொண்டதாகவும், அவர்களிடமிருந்து தப்பிக்க ஒரு கோடி ரூபாய் ரெடி பண்ணி வை...” என்று குவளைசெழியனை மிரட்டி அவருடைய மனைவியுடன் பேச வைத்தோம்.
;அவரது மனைவி முதலில் ரூ.50-இலட்சம் ரெடி பண்ணுவதாகவும், அதன் பிறகு ரூ.25-இலட்சம் ரெடி பண்ணிவிட்டதாகவும் கூறினார். இதனிடையே, இரவு 11.00-மணியளவில் வாணியம்பாடி டோல்கேட் அருகே சென்ற போது இக்ரமுல்லா “இவனை கடத்தியது பற்றி போலீசுக்கு தகவல் போயிருச்சு. இவனை முடிச்சுட்டு ஊருக்கு போய் விடலாம்...” என்று கூறினார்.sp;பின்னர் குவளை செழியனை அடித்து உதைத்து அதிகாலை 3 மணியளவில் பொம்மிடியில் இருந்து பைரநத்தம் ரோட்டில் சென்று ஒரு காட்டுப்பகுதியில் வண்டியை நிறுத்தி குவளைசெழியனின் கழுத்தை அறுத்தோம். 

பின்னர், எங்களுடன் இருந்த ஆட்களை கொண்டு கத்தியால் செழியனின் இரண்டு கால்களையும் துண்டு, துண்டாக வெட்டினோம். பின்னர் காட்டுப்பகுதியில் தீவைத்து கொளுத்திவிடலாம் என்று முடிவு செய்தோம்.

அதன்படி, தீவட்டிப்பட்டி அருகில் இராமமூர்த்தி நகர் அருகே வந்து காரை, பள்ளத்தில் இறக்கி விட்டு விபத்து நடந்தது போல காட்டி, பெட்ரோலை பிரேதத்தின் மீதும் வண்டியிலும் ஊற்றி நான் தீப்பற்ற வைத்தேன். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததால் என் கை ஸ்டிரிங் மீது பட்டதில்  கார் ஹாரண் அடிக்க தொடங்கியது. இதனால், எங்களுடன் இருந்த ஆட்கள்  எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடிவிட்டனர்.

அதேநேரத்தில் நான் தனியாக நின்று தீப்பற்ற வைக்கும் போது, என் மீத பட்டிருந்த பெட்ரோலின் மீது தீ பிடித்ததில் எனது கையில் தீக்காயம் ஏற்பட்டுவிட்டது. இதற்குள், அந்தப் பக்கத்திருந்த காடுகளில் குடியிருந்த மக்கள் வெளியே வந்ததால், நான் பூக்காடுக்குள் ஊட்டி ஒழிந்தேன். அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டேன்” என்று அவர் தனது வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.- பெ.சிவசுப்ரமணியம்  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: