புதன், 16 மார்ச், 2016

பென்னாகரம் கிறித்துவ....மாற்று திறனாளிகள் சம்பளம் இல்லா தொழிலாளர்கள்? நிறுவனத்தின் மோசடிகள்


வினவு.com :மாற்றுத் திறனாளிகளை அழைத்து வந்து மறுவாழ்வு கொடுப்பதாக கூறி வெளிநாட்டவர் வரும்பொழுது இவர்களை காட்டி போட்டோ எடுத்துகொள்வது, உதவுவது போல் நடிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். இவர்களின் திருட்டு வேலைகள் எல்லாம் கடந்த ஓராண்டுகளாக அம்பலப்பட்டு நாறிவருகிறது. மாற்றுத் திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், கண் பார்வையற்றோர், ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு, விதவைகள், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினர் மத்தியில் பழகி சில உதவிகளை செய்வது, பிறகு சலுகைகள் கொடுத்து கருணை உள்ளம் போல கபட நாடகமாடி மதமாற்றம் செய்வது, இதை காட்டி வெளிநாட்டு பணத்தை சுருட்டுவது என கொள்ளை கூடாரமாக   25 ஆண்டுகளாக பலகோடி ரூபாய்களை கிறித்துவ கெரீசிம் புனர்வாழ்வு தொண்டு நிறுவனம் சுருட்டி உள்ளது. இது பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு என்ற பெயரில் ஒரு மாதத்திற்கு 30 லட்சம் ரூபாய் இந்த தொண்டு நிறுவனத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாக கூறுப்படுகிறது.
இதனை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்காமல் கொள்ளையடித்து கொழுத்து வருகின்றனர் இந்திரா, ஜோசப் பொன்ராஜ், கைகூலி லாரன்ஸ் சந்திரன் உள்ளிட்ட  தொண்டு நிறுவனத்தின் நபர்கள். மாதம் ஒரு புதிய கார், பெரிய நகரங்களில் ஆடம்பர பங்களா, உல்லாசம் என கும்மாளமிட்டு வருகிறது இந்த கும்பல். மேலும் ரியல் எஸ்டேட், கல்வி நிலையங்கள் தொடங்கி, பல செயல்களால் பலகோடிகளை சுருட்டி மோசடி செய்து வருகிறது. மேற்கண்ட இவர்களின் செயல்களுக்கு இடையூராக இருப்பவர்களை பழிவாங்கி கொடுமைபடுத்துகிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு பென்னாகரம் பெத்தம்பட்டியில் இக்கும்பல் ஒரு சிறிய சர்ச் ஆரம்பித்தது. புதியதாக சர்ச் தொடங்குவது என்றால் வறிய ஏழை, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் சென்று அடித்தளமிடுகின்றர். மேலும் கிராமந்தோறும் இருக்கின்ற மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்து மறுவாழ்வு கொடுப்பதாக கூறி வெளிநாட்டவர் வரும் பொழுது இவர்களை காட்டி போட்டோ எடுத்துகொள்வது, உதவுவது போல் நடிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். இவர்களின் திருட்டு வேலைகள் எல்லாம் கடந்த ஓராண்டுகளாக அம்பலப்பட்டு நாறிவருகிறது. ஏன் இன்றைக்கு பெத்தம்பட்டி மக்கள் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் அந்த சர்ச்க்குள் சாதாரணமாக நுழைய முடியாது.
மேலும் மாற்றுதிறனாளிகளுக்கு கணிணி, கோழிபண்ணை, தையலெந்திரம், மைக்செட், கல்வி உதவிதொகை என பல்வேறு உதவிகளை செய்வது போல் நாடகமாடினர். பாலக்கோடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை, பாப்பாரபட்டியை சேர்ந்த சின்னராஜ், ஆறுமுகம், தருமன் போன்ற மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொடுத்த பொருட்களை எல்லாம் மிரட்டி பறித்து வந்துள்ளனர். இம்மக்கள் வளர்த்த கோழிகளைக் கூட அள்ளி சென்றுள்ளனர். இது போல் உதவிகளை காட்டி உண்மையாக மாற்றுதிறனாளிகளுக்கு சேர வேண்டிய பொருள்கள், பணம் அனைத்தையும் மாதம் பல லட்சம் வரை திருடியது தற்போது அம்பலமாகி உள்ளது. கடந்த 25 வருடங்களாக இதுபோன்ற மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
தாங்கள் ஏமாற்றபட்டதை கண்டு மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறையிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த திருட்டு கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையும், அதிகாரிகளும் இந்த கிறித்துவ தொண்டு நிறுவனத்திடம் கூட்டு சேர்ந்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த திருட்டு கும்பலை அம்பலபடுத்திய 5 ஊழியர்களையும் வேலையை விட்டு நீக்கி உள்ளனர்.
இது போன்ற கிறித்துவ தொண்டு நிறுவனத்தின் உண்மையான நோக்கம், சில உதவிகளை செய்து ஏழை வறிய தாழ்த்தபட்ட மக்களை மதமாற்றம் செய்வது, நாட்டுபற்று இல்லாத நபர்ளாக மக்களை மாற்றுவது, எவன் எப்படி போனால் நமக்கு என்ன, எல்லாம் தேவன் கையில் இருக்கிறது. தான் பிழைத்தால் போதும் என மக்களின் சிந்தனையை திசைத்திருப்பி போராட்ட உணர்வற்ற நபர்களாக்குவது என்பதுதான் இவர்களின் உண்மையான நோக்கம். அதே சமயம் அந்நிய செலாவணி வருகை, மக்கள் நலனில் அக்கரையற்ற போக்கு இது போன்ற காரணங்களால் அரசே இந்த குற்ற செயல்களுக்கு துணையாக நிற்கிறது.
எனவே பெத்தம்பட்டி, ராஜாவூரில் இருக்கின்ற கிறித்துவ தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றியதற்கு எதிராக ஒன்றிணைவோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நியாயமாக சேரவேண்டிய பொருட்களை பெற்றுதர அணிதிரள்வோம்.
மாற்றுத்திறனாளிகளை காட்டி பலகோடி சுருட்டிய பென்னாகரம் பெத்தம்பட்டி, ராஜாவூர் கிறித்துவ கெரிசீம் புனர்வாழ்வு தொண்டு நிறுவனத்தை தடைச்செய்! அரசே ஏற்று நடத்து !
தெருமுனைக்கூட்டம்
நாள்: 15-3-2016 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு
இடம்: பென்னாகரம் டெம்போ ஸ்டேண்டு
தலைமை : தோழர் கோபிநாத், வட்டார செயலர், பென்னாகரம்
உறையாற்றுவோர்: தோழர் மாயாண்டி, வட்டார குழு உறுப்பினர், பென்னாகரம்,
தோழர் ஜானகிராமன் வழக்கறிஞர், மாவட்ட செயலர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தருமபுரி .


படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

கருத்துகள் இல்லை: